Free career guidance and assistance for the poor students
அன்பார்ந்த மாணவர்களுக்கு,
பொருளாதார காரணங்களால் உங்களால் உங்கள் கல்லூரி படிப்பை தொடங்க முடியவில்லையா?.
என்ன படிப்பது?. எங்கு படிப்பது?.
இந்தியாவில் உள்ள பல்கலைக்கழங்களில் சேர செல்வதற்கான நுழைவு தேர்வுகள் என்னென்ன?
இன்னும் பல கல்வி சார்ந்த உதவிகள் மற்றும் சந்தேகங்களுக்கு விளக்கம் வேண்டி நிற்பவரா நீங்கள்? கவலை வேண்டாம்!
உங்களுக்கு உதவிட கோவிட் நிவாரண குழுவின் சமுக ஆர்வலர்கள் மற்றும் கல்வி சார்ந்த தொண்டு நிறுவனங்களுடன் இனைந்து கல்வி வழிகாட்டல் மற்றும் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு தேவையான உதவிகள் வழங்க தயாராக உள்ளது.
முக்கியமாக கிராமங்களில் பள்ளி படிப்பை முடித்த அரசு பள்ளி மாணவர்கள் பொருளாதார பிரச்சனையின் காரணமாக தங்கள் படிப்பை தொடர முடியா சூழல் எனில் அவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்களின் கல்லூரி கட்டணத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்படும்.
அரசு பள்ளியில் படித்த நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் பொருளாதார காராணங்களால் மட்டும் என்னால் கல்லூரி படிப்பை தொடர முடியவில்லை என்றால் கீழ்காணும் லிங்கில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.
https://forms.gle/nWm567PifyF6roWd8
விண்ணப்பித்த மாணவர்கள் கலந்தாய்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கலந்தாய்வு நடைபெறும் இடம் மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும் தகவல்களுக்கு கீழ்காணும் எண்களை தொடர்பு கொள்ளவும்.
கோவிட் நிவாரண குழு +91 94882 53373, +91 86085 33663