Opportunities for 12th students by government
+2 முடித்த மாணவர்களுக்கு ஒரு நற்செய்தி நீங்கள் அரசின் செலவிலேயே சட்டம் படித்து வழக்கறிஞர், நீதிபதி, கார்பரேட் கம்பெனிகளில் சட்ட ஆலோசகர் போன்ற உயர்பதவிகளில் அமர பிரமாண்டமான வாய்ப்பு.
மேலும் அரசு வேலைக்கான TNPSC க்ரூப் தேர்வுகளில் சட்டம் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது மத்திய அரசு பணிக்கான UPSC சிவில் சர்வீசஸ் தேர்வுகளை சட்டம் படித்தவர்களால் எளிதாக வெல்ல முடியும் இவை அல்லாமல் சட்டம் தொடர்பான IT துறையான LPO விலும் கால்பதித்து கைநிறைய சம்பாதிக்கலாம். அன்றைய பெரும் ஆளுமைகளான டாக்டர்.அம்பேத்கர், மகாத்மா காந்தி, முகமது அலி ஜின்னா, நேரு, வல்லபாய் படேல் போன்றோரும், இன்றைய இந்திய அரசியலில் பெரும் அறிவார்ந்த நபர்களும், சட்டசபை சபாநாயகர்களும், மாநில கவர்னர்களும் சட்டம் படித்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
பணம், பதவி இவற்றிற்கு அப்பால் பலவித அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் சமூகங்களுக்கான நீதியை பெற்று தரும் ஒப்பற்ற பணியும் செய்ய முடியும். சமூகத்தில் யாருக்கும் அஞ்சாமல் உயர்ந்த இடத்தில் வாழ முடியும். சிறப்பான ஆளுமையாக உருப்பெற முடியும்.
இவ்வளவு வாய்ப்புகளை அள்ளி தரும் ஐந்தாண்டு சட்ட படிப்பு சேர்க்கைக்கான அறிவிப்பை டாக்டர் அம்பேத்கர் பல்கலை கழகம் வெளியிட்டுள்ளது.
12 ஆம் வகுப்பு முடித்த அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
முஸ்லிம்களுக்கு 3.5% இட ஒதுக்கீடு உண்டு.
வயது வரம்பு கிடையாது, அனைத்து வயதினரும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பம் 05/08/20 முதல் www.tndalu.ac.in எனும் இணையத்தில் ஆன்லைனிலும் 10/08/20 முதல் அந்தந்த சட்டக்கல்லூரிகளில் நேரடியாகவும் வாங்கி கொள்ளலாம்.
உங்களுடைய விண்ணப்பங்கள் பல்கலைக் கழகத்திற்கு வந்து சேர கடைசி நாள் 04/09/20.
தமிழகத்தில் 1.சென்னை 2.மதுரை 3.திருச்சி 4.கோவை 5.திருநெல்வேலி 6.செங்கல்பட்டு 7.வேலூர் 8.விழுப்புரம் 9.தர்மபுரி 10.இராமநாதபுரம் 11.சேலம் 12.நாமக்கல் 13.தேனி ஆகிய இடங்களில் அரசு சட்டக்கல்லூரிகள் உள்ளன.
அனைத்து சட்டக்கல்லூரிகளுக்கும் விண்ணப்பிக்க ஒரே ஒரு விண்ணப்பம் போதுமானது. நுழைவு தேர்வு/தகுதி தேர்வு எதுவும் கிடையாது. ஆங்கிலம்/தமிழ் இரு மொழிகளிலும் சட்டம் படிக்கலாம். ஒரு ஆண்டிற்கான படிப்பு செலவு ரூ.3000 க்குள்ளாகவே ஆகும். இந்த செய்தியை அனைவருக்கும் பகிர்ந்து உதவுங்கள்.
மேலும் விவரங்களுக்கு: தொடர்புக்கு: 9994138092, 8056405449.