Indian student selected in IAS at younger age

Share this article on :

இந்தியாவின் மிக குறைந்த வயது பெண் ஐ ஏ எஸ் அதிகாரி எனும் கவுரவம் 22 வயதான ஸஃப்னா நாசருதீன் பெற்றுள்ளார்..

கடந்த 2019 ம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்விஸ் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அகில இந்திய அளவில் 45 வது ரேங்கும் கேரளாவில் 3 வது ரேங்குடனும் தேர்ச்சி பெற்றுள்ளார்.

திருவனந்தபுரம் அருகில் பேயோடு என்ற ஊரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் நாசருதீன் – ரம்லா தம்பதியர் மகள். திருவனந்தபுரம் மார் இவானியஸ் கல்லூரியில் பொருளாதார இளங்கலை பட்டம் பல்கலைகழக முதல் மாணவியாக தேர்ச்சி பெற்ற ஸஃப்னா சிவில் சர்விஸ் தேர்வுக்கு தயாராகி முதல் முயற்சியிலேயே இந்திய அளவில் முதல் 50 இடங்களுக்குள் வெற்றி பெற்று வியத்தகு சாதனையை சொந்தமாக்கியுள்ளார்..

அதேபோல், திருச்சூர் மாவட்டம் குருவாயூர் அருகில் காரைக்காடு கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சியை பரிமாறி வருகின்றனர்.. தங்களது ஊரில் கட்டிட காண்டிராக்ட் தொழில் செய்யும் லத்தீப் -சகீனா தம்பதியர் மகள் ருமைஸா சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 185 ம் ராங்குடனும், கேரளா அளவில் 12வது ராங்குடனும் வெற்றி பெற்றுள்ளார்..

பள்ளிப்படிப்பு, +2 குருவாயூரில் பயின்ற ருமைஸா சென்னை ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். சென்னையில் படிக்கும் காலத்தில் நடைபெற்ற UN Model Assembly ல் மாணவர் பிரதிநிதியாக பங்கு பெற்ற ருமைஸா மாநில அளவில் நடைபெற்ற Quiz போட்டிகளில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றவர்…

திருவனந்தபுரம் அரசு சிவில் சர்விஸ் அகாடமியின் மூலம் பயிற்சி பெற்று தேர்வெழுதிய ருமைஸா தவறாது செய்தித்தாள் வாசிப்பது மட்டுமே தனது வெற்றிக்கு உதவியதாக கூறுகிறார்..

தொடர்ந்த முயற்சியும், பயிற்சியும் நிச்சயமாக வெற்றியைத்தரும்.

வெற்றி பெற்றவர்களை வாழ்த்துவோம்.

முயல் ஆமை கதை தெரியும் முயல் வெல்லும் ஆமை கூட வெல்லும். முயலாமை ஒருபோதும் வெல்லாது.

உங்கள் வீட்டில்; உங்கள் குழந்தைகளும் முயன்றால் அடையலாம்.

உங்கள் குழந்தைகளின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன், அ. முகமது ஜியாவுதீன்