Importance of Education

Share this article on :

எதிர்காலத்தை நினைத்து கவலை பட வேண்டாம், நம்முடைய எதிர்காலத்தை எந்த கொம்பனாலும் சிதைக்க முடியாது. நம்முடைய அறிவும் திறமையையும் தான் நம் எதிர்காலத்தை முடிவு செய்கின்றது, ஆட்சியோ அதிகாரமோ இல்லை.

இங்கு எதுவும் நிரந்தரம் இல்லை, உலக அளவில் வாய்ப்புகளின் கதவுகள் திறந்தே இருகின்றது. கல்வியில் முன்னேறுவோம், எதிர்கால தொழில் நுட்பங்களை உருவாக்குவோம், உலக அளவில் சிறந்த வாய்ப்புகளை உருவாக்குவோம், கோடான கோடி மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்கலாம்.

கவலை, கோபம், வெறுப்பு இவற்றால் எந்த பயனும் எப்போதும் ஏற்பட்டதில்லை. கண்டனம் தெரிவிப்பதாலோ, புலம்புவதாலோ, உணர்சிவசபடுவதினாலோ உங்களால் வெற்றியடைந்து விட முடியாது, துயரங்களிலிருந்து விடுபடவும் முடியாது

தெளிவான வெற்றி என்றால் என்பதை குர்ஆனில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள்

(முஹம்மதே!) தெளிவான, மாபெரும் வெற்றியை உமக்கு நாம் அளித்தோம் (குர்ஆன் 48:1) – இந்த வசனத்தின் வரலாற்று பின்னனி வெற்றிக்கான வழியை உங்களுக்கு விளக்குகின்றது, அந்த வரலாற்றை பார்ப்போம்

மதீனா வந்தபிறகு முதன் முதலாக கஃபாவை தவாஃப் செய்ய நபி(ஸல்) அவர்கள் ஹிஜிரி 6-ஆம் ஆண்டு மக்கா நோக்கி சென்றார்கள், வழியிலேயே நபி(ஸல்) அவர்கள் மக்காவின் தலைவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். இதை பார்த்த நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் பலர் கோபட்டார்கள், சண்டையிட்டுவோம் என சொன்னார்கள். தோழர்களின் அறிவுறையை புறகணித்து எதிர்த்த மக்களோடு அமைதி ஒப்பதம் போட்டார்கள் நபி(ஸல்) அவர்கள். மக்காவிற்க்கு செல்லாமல் மதீனாவிற்கே திரும்பினார்கள்.

இந்த அமைதி (ஹுதைபியா) உடன்படிக்கையை தான் அல்லாஹ் குர்ஆன் 48:1 வசனத்தில் “தெளிவான, மாபெரும் வெற்றி” என்று குறிபிடுகின்றான். இந்த வசனம் இறங்கிய உடனே நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு அதை ஓதிக்காட்டினார்கள். உமர் (ரலி) அவர்களோ, “அல்லாஹ்வின் தூதரே! இது வெற்றியா?” என்று திருப்பி கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “ஆம் (வெற்றிதான்)” என்று பதிலளித்தார்கள். (ஸஹீஹ் முஸ்லீம் 3657)

இந்த உடன்படிக்கைக்கு பிறகு 2 ஆண்டு காலம் அறிவார்ந்த செயல்பாடுகள் மூலம் எந்தவித சண்டையும், மோதலும் இல்லாமல் மக்காவை சேர்ந்த மக்களே தானாக முன்வந்து மக்காவை நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கினார்கள்.

இப்போது சொல்லுங்கள், அல்லாஹ் கூறியது போல அந்த சமாதான உடன்படிக்கை மகத்தான வெற்றியை தானே தந்தது. சண்டையில் வெற்றியும் இருக்கும் தோல்வியும் இருக்கும், ஆனால் அறிவார்ந்த செயல்பாடுகளில் வெற்றி மட்டுமே இருக்கும்.

தீர்வுகளை ஆர்பாட்டம், போராட்டம், கண்டன அறிக்கைகளில் தேடாதீர்கள், அரசியல் கட்சிகளின் ஆதரவுகள் மூலம் உரிமைகளை வென்றுவிடலாம் என்று நினைக்காதீர்கள்.

அறிவார்ந்த சுயசார்புள்ள சமூக கட்டமைப்பை உருவாக்க உங்கள் நேரத்தையும், அறிவையும் செலவிடுங்கள்.

பாஸிசத்தால் உங்களை வீழ்த்த முடியாது. நம்முடைய வீழ்சிக்கு நம்முடைய சோம்பேரிதனமும், இயலாமையும் தான் காரணமாக இருக்கும். நபி (ஸல்) அவர்கள், இயலாமை, சோம்பல் ஆகியவற்றிலிருந்து இறைவனிடம் பாதுகாப்பு தேடியவர்களாக இருந்தார்கள் (ஸஹீஹ் புகாரி 6367) ஆக்கம் : S. சித்தீக் M.Tech