UPSC Candidates (27) selected from zakath foundation of India

Share this article on :

ஜகாத் நிதி பங்களிப்பில் IAS தேர்ச்சி பெற்ற 27 பேர்


கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது. 10, 20, 50 ரூபாய் நோட்டுகளாக சில்லறை மாற்றி வைத்து, வீட்டு முற்றத்தில் வருபவர்களுக்கு தரம் பார்த்து கொடுத்து அதை ஜகாத் என்று பெருமைப்படுபவர்கள் மத்தியில், தாராள மனம் படைத்தவர்களிடமிருந்து ஜகாத் நிதியை ஒருங்கிணைத்து வசூலித்து அந்த நிதியின் மூலம் சமுகத்துக்கு பயனுள்ள அறப்பணிகளை முன்னெடுத்து வருகிறது

Zakat Foundation of India..சையத் சஃபர் மஹ்மூத். மத்திய அரசு பணியில் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி. மன்மோகன்சிங் ஆட்சியில் பிரதமர் அலுவலக மூத்த அதிகாரிகளில் ஒருவரான மஹ்மூத் #சச்சார் கமிஷன் அறிக்கை குழுவில் ஒரு உறுப்பினராக பணியாற்ற்றியவர்.. இவரது சிந்தனையில் உருவாகிய அமைப்பு தான் Zakat Foundation..ஆரம்பத்தில் ஜகாத் நிதி மூலம் கல்வி உதவிகள், மருத்துவ உதவிகள் மற்றும் பேரிடர் கால நிவாரணங்கள் வழங்கி வந்த இந்த அமைப்பு 2013 முதல் பின்தங்கிய பகுதியில் உள்ள மாணவர்கள் போட்டி தேர்வுகளில் பங்கேற்க தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த 2% மாணவர்கள் சிவில் சர்விஸ் தேர்வுகளில் வெற்றி பெற்ற நிலை மாறி இந்தாண்டு வெற்றி பெற்ற 829 பேரில் 42 முஸ்லீம்கள் தேர்ச்சி பெற்று 5% இலக்கை அடைய முடிந்துள்ளது.. அதிலும் Zakat Foundation நிதியுதவியுடன் பயின்ற கிராமப்புறங்களை சேர்ந்த 27 பேர் தேர்ச்சி பெற்றுள்ளது பெருமைக்குரிய விஷயம்..

பல்வேறு மாநிலங்களில் 40 இடங்களில் Orientation Programne நடத்தி தேர்வான 700 மாணவர்களில் , முதல் கட்ட பயிற்சிக்கு பின் தகுதியான 50 பேர் தேர்ந்தெடுத்து Zakat Foundation மூலம் தங்குமிடம், உணவு, Education Materials முற்றிலும் இலவசமாக வழங்கி 27 பேர் சிவில் சர்விஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்ந்த பதவிகளில் இறையருளால் அமரவுள்ளனர்..

Hamtharth Study Circle, Jamia Milliya IAS coaching centre மூலம் 20 பேரும், பிற நிறுவனம் மூலம் 5 பேருமாக மொத்தம் 42 பேர் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது…

ஜகாத் பணத்தை ஒவ்வொரு பகுதியிலும் ஒருங்கிணைத்து வசூலித்து சமுதாய மறுமலர்ச்சிக்கான ஆக்கபூர்வமான திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என்பதற்கு இது சிறந்த முன்மாதிரி.

சிவில் சர்வீஸ் (UPSC 2019) தேர்வு முடிவுகள், முஸ்லிம் சமுதாய செயல்பாடு எப்படி? புதிய உச்சமா? ஓர் ஒப்பீடு….

முடிவுகள் நேற்று வெளியாகியிருக்கிறது. IAS, IPS, IFS உள்ளிட்ட சிவில் சர்விஸ் பணியிடங்களுக்கு தேர்வாகியுள்ள 829 பேரில், 45 பேர் முஸ்லிம்களாவர் (பார்க்க படங்கள்). இது முந்தைய முடிவை காட்டிலும் 60% அதிகமாகும். சென்ற முறை 28 முஸ்லிம்கள் தேர்வாகியிருந்தனர். இம்முறை தேர்வான முஸ்லிம்களில் ஆறு பேர் பெண்களாவர். முஸ்லிம்களில் முதல் இடத்தை பிடித்துள்ள கேரளாவை சேர்ந்த சfப்னா நசருதீன், இந்திய அளவில் 45-வது இடத்தை பிடித்துள்ளார்.

சராசரியாக 2% என இருந்த முஸ்லிம் தேர்வாளர்களின் எண்ணிக்கை, தொடர்ச்சியான விழிப்புணர்வின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஏறுமுகத்தில் இருந்தது. சென்ற முறை இது குறைந்த போதிலும் இம்முறை கணிசமாக அதிகரித்திருக்கிறது. சதவீத கணக்கில், இந்திய வரலாற்றில், அதிக முஸ்லிம்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுவது இம்முறையே அதிகமாகும். சென்ற ஆண்டுகளின் முஸ்லிம் சமுதாய தேர்ச்சி சதவீதம் பின்வருகிறது.

2015 – 3.3% 2016 – 4.5% 2017 – 5.1% 2018 – 3.6% 2019 – 5.4%

இந்த நல்ல முன்னேற்றத்தை உத்வேகமாகக் கொண்டு, இன்னும் அதிகப்படியான விழிப்புணர்வு பிரச்சாரத்தை நாம் மேற்கொண்டு, குறைந்தபட்சம் முஸ்லிம் விகிதாச்சார அளவிற்காவது தேர்வாகும்படி நாம் மேலேற வேண்டும். தேர்வான அனைவருக்கும் வாழ்த்துக்கள். சமுதாயத்திற்கு பயனுள்ள சேவையாக அமைய பிரார்த்தனைகள்.

தகவல் திரட்ட உதவிய தளங்கள்: இந்திய அரசின் UPSC இணையதளம், Muslim Mirror மற்றும் Hindustan Times