How to empower community in education and power

Share this article on :

சமுதாயத்தை கல்வியில், அதிகாரத்தில் முன்னேற்றுவதற்கான செயல்திட்டங்கள் (தொடர் 2)

பள்ளிவாசல்களில் தினமும் பள்ளி மாணவ, மாணவியருக்கு டியூஷன் சென்டர் நடத்த வேண்டும், அதில் பாடங்களை எளிதில் கற்றும் வழிமுறைகளை பயிற்றுவிக்க வேண்டும், எதிர்கால வாய்ப்புகளை பற்றி விளக்க வேண்டும் ஆகிய திட்டங்களை கடந்த பதிவில் பார்த்தோம், அதன் தொடர்சியை இந்த பதிவில் பார்ப்போம்.

மூன்றாவதாக மாணவர்களுக்கு ஆங்கிலம், கணித பயிற்சி அளிக்க வேண்டும், எளிதில் ஆங்கிலம், கணிதம் கற்க பல்வேறு வழிமுறைகள் உள்ளது, அதை பள்ளிவாசல்கள் மூலம் அனைத்து மாணவ, மாணவியருக்கும் கொண்டு சேர்த்து ஆங்கில மொழியில் ஆளுமை உள்ளவர்களாகவும், கணித அறிவுள்ளவர்களாகவும் மாற்ற வேண்டும்.

அடுத்ததாக மாணவர்களுக்கு எதிர்காலத்தை பற்றிய நம்பிக்கையை ஊட்ட வேண்டும், வாழ்வில் நம்மால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையும், தைரியமும் துளியும் இல்லாதவர்களாக இஸ்லாமிய மாணவர்கள் இருகின்றனர். நீங்கள் எவ்வளவு ஏழையாக இருந்தாலும் கல்வியை கொண்டு உலக அளவில் மிக உயர்ந்த இடத்தை உங்களால் அடைய முடியும் என்பதை உதாரணங்கள் மூலமும், குர்ஆன், ஹதீஸ் மூலமும் மாணவர்களுக்கு புரியவைக்க வேண்டும்.

அடுத்தாக மாணவர்களுக்கு ஆர்வ மூட்ட வேண்டும், ஆரம்பல கால கட்டத்தில் இந்திய முஸ்லீம்கள் கல்வியில் முன்னேறியவர்களாக இருந்தனர், இதனால் அதிகாரத்திலும், பொருளாதாரத்திலும் உயர்ந்து இருந்தனர், பின்னர் கல்வியில் பின் தங்கியதால் தான் இவ்வளவு அடக்குமுறைகளுக்கு ஆளாகி வருகின்றனர், மீண்டும் நீங்கள் கல்வியில் உயர்ந்தால் இழந்த உரிமைகளை மீட்க முடியும் என்பதை ஆதாரங்களுடன் விளக்க வேண்டும். கல்வி கற்பதினால் அவர்களுக்கு ஏற்படும் நன்மைகளை விளக்கி படிப்பின் மீது ஆர்வத்தையும், ஈர்ப்பையும் ஏற்படுத்த வேண்டும்.

இவ்வளவு வகுப்புகளை மாணவர்களுக்கு எப்படி எடுக்க முடியும் என திகைக்க வேண்டாம், தினமும் ஒரு மணி நேரம், வாரத்திற்க்கு 6 நாள், இப்படியாக ஒரு மாணவர் 2 முதல் 4 ஆண்டுகள் வரை பள்ளிவாசலில் படிப்பதால் மேலே சொன்ன அனைத்து வகுப்புகளையும் எடுக்கலாம்.

இதற்க்கு 2 முதல் 4 பயிற்சியாளர்கள் வரை தேவைபடுவார்கள், ஒரு வார பயிற்சியில் இப்படிபட்ட பயிற்சியாளர்களை எளிதில் உருவாக்கிவிடலாம். இந்த பயிற்சியாளர்களுக்கு மாதம் 3 ஆயிரம் முதல் 6 வரை சம்பளம் வழங்கலாம். ஊர் மக்களின் எண்ணிகைக்கு ஏற்ப இந்த டியூஷனுக்கு மாதம் 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவாகும். பள்ளிவாசல் சார்பாக இந்த வகைக்கு ஜகாத் பணத்தை திரட்டி செலவை சமாளிக்கலாம். இந்த வகைக்கு ஜகாத் பணத்தை செலவழிப்பதை மார்க்க அடிப்படையில் தவறு என்று கூற முடியாது.

ஜமாஅத் நிர்வாகம் இந்த செயல்திட்டங்களை செயல்படுத்த முன்வர வேண்டும். இதற்க்கு ஜமாஅத் நிர்வாகத்தில் கல்வியாளர்கள், கல்வி பணியாற்றக்கூடியவர்கள் இருப்பது அவசியம்.

பொதுவாக நிர்வாக பொருப்பிற்க்கு வரவேண்டும் என்றால் அரசியல் செய்ய தெரிந்து இருக்க வேண்டும், கல்வியாளர்கள் பெரும்பாலும் அரசியல் செய்துவது இல்லை (அல்லது விரும்புவதில்லை). எனவே அவர்களால் இயற்கையாக ஜமாஅத் நிர்வாக பொருப்பிற்க்கு வர முடியாது. எனவே கல்வி பணியாற்றுபவர்களுக்கு ஜமாஅத் நிர்வாகத்தில் 33 % இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

இந்த கட்டாய இட ஒதுக்கீடு மூலம் எந்த நிர்வாகம் வந்தாலும் அதில் 3-ல் ஒரு பகுதியினர் கல்வி பணி செய்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் மூலம் இந்த செயல்திட்டங்களை பள்ளிவாசலில் எளிதில் செயல்படுத்தலாம்.

கல்லூரி மாணவர்களின் முன்னேற்றத்திற்க்கான நமது அடுத்து செயல்திட்டத்தை நாளை பார்ப்போம் (இன்ஷா அல்லாஹ்)

ஆக்கம் : S.சித்தீக் M.Tech