Information about Arts and Science

Share this article on :

+2 முடித்தவுடன் மற்றவர்கள் சொல்லுவார்கள்

பொறியியல் கல்லூரி(Engineering College) செல்பவர்களை புத்திசாலி என்று.

கலை மற்றும் அறிவியல் கல்லூரி(Arts and Science College) செல்பவர்களை அவர்களுக்கு அறிவு அவ்வளவுதான் என்று.

ஆனால்

நான்கு ஆண்டுகள் பொறியியல் கல்லூரியிலும்

மூன்று ஆண்டுகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் படிப்பை முடித்தவுடன்தான் தெரியும் யார் புத்திசாலி? யாருக்கு அறிவு அவ்வளவுதான்? என்று...

என்றுமே தன்னிலை மாறாத கல்வியென்றால் அது கலை மற்றும் அறிவியல் கல்விதான். அது அங்கே படித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.

பொறியியல் மற்றும் மருத்துவம் மட்டுமே உயர்ந்த கல்வியல்ல... கலை அறிவியல் கல்வியை ஆர்வமுடன் கற்று அதில் திறமையுடன் தேர்ச்சி பெற்றால் பொறியியல் மற்றும் மருத்துவம் படித்தவர்களை விட அதற்க்குறிய எந்த துறையிலும் பணியில் சேர்ந்து அவர்களை விட நல்ல சம்பாதிக்கலாம்.

இன்று +2 முடித்தவுடன் எத்தனை பேர் ஆசிரியர் பயிற்ச்சி கல்லூரியிலும், கலை அறிவியல் கல்லூரியிலும் சேர்கின்றனர்?

என்னமோ Engineering, Medical college புத்திசாலிகளுக்கு மட்டும், Arts and Science College திறமை குறைந்த‌வர்களுக்கு மட்டுமே என்று நினைத்து கொண்டிருக்கின்றனர் சிலர். அதனால் குறைந்த மதிப்பெண் எடுத்தாலும் பரவாயில்லை பணத்தை கொட்டிக் கொடுத்தாவது Engineering, Medical college இல் மாணவர்கள் சேர்கின்றனர். அவர்களின் பெற்றோர்களும் பெருமைக்காக அவர்கள் பிள்ளைகளை சேர்க்கின்றனர்.

Engineering படித்தவர்கள் எத்தனை பேர் அதில் நல்ல முறையில் தேர்ச்சி பெற்று 4 வருடத்தில் கல்லூரியை முடித்து வெளியே வருகின்றனர்? அதில் எத்தனை பேருக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கிறது?

மருத்துவக் கல்லூரியில் படிப்பவர்களில் எத்தனை பேர் ஐந்தரை ஆண்டுகளில் கல்லூரியை முடித்து நல்ல முறையில் தேர்ச்சி பெற்று வெளியே வருகின்றனர்? அதில் எத்தனை பேர் சிறந்த மருத்துவராக பணிபுரிகின்றனர்?

பெற்றோர்களே... போட்டியிலும், பொறாமையிலும், பெருமைக்காகவும், பேராசையிலும் பணத்தையும், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை வீணடிக்காதீர்கள்.

எந்த படிப்பும் குறைந்ததல்ல/கீழ்தரமானதல்ல. திறமையாக தேர்ச்சி பெற்றால் எல்லா படிப்பும் நிச்சயமாக நல்ல எதிர்காலத்தை உருவாக்கும்.