North Indian students Achievement in Judicial Service Exam

Share this article on :

இந்திய முஸ்லிம் சமூகம் பெரிதும் கற்பதற்கு ஆசைப்படாத வழக்கறிஞர் கல்வியை கற்றதோடு நிற்காமல் தங்கள் லட்சிய கனவான நீதிபதிக்கான தேர்விலும் சாதித்து காட்டியுள்ளனர் வட மாநிலங்களை சேர்ந்த இஸ்லாமிய இளம்பெண்கள்..

இந்திய முஸ்லிம்கள் கல்வி கற்பதில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக சச்சார் கமிட்டி அறிக்கையில் குறிப்பிட்ட பீகார், உ.பி மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே நேரத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இளம் முஸ்லிம் வழக்கறிஞர்கள் தங்களது மாநிலங்களில் நடைபெற்ற பணியாளர் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று நீதிபதிகளாக பணியில் சேரவுள்ள சந்தோஷ வார்த்தைகள் வெளியாகி உள்ளது..

கடந்த மாதம் உத்தரபிரதேச மாநிலத்தில் வெளியான சிவில் ஜட்ஜ் தேர்வு முடிவுகளில் 18 பெண் வழக்கறிஞர் உட்பட 38 முஸ்லிம்களும், ராஜஸ்தான் மாநிலத்தில் 5 பெண் வழக்கறிஞர் உட்பட 6 முஸ்லிம்களும் நீதிபதிகளாக தேர்ச்சி பெற்ற நிலையில் பீகாரில் 7 பெண்கள் உட்பட 22 முஸ்லிம்கள் ஒரே நேரத்தில் நீதிபதிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்... அலிகார், ஜாமிஆ மில்லியா, ஹம்தர்த் ஸ்டடி சென்டர் போன்ற நிறுவனங்கள் இவர்களின் தேர்ச்சிக்கு பின்னால் இயங்கி வருகிறது..

தமிழகத்தில் கூட கையெட்டும் தூரத்தில் தான் நமது சந்ததிகளின் சிறப்பான எதிர்காலம் உள்ளது.. போட்டித்தேர்வுகளில் கலந்து கொள்ள ஊக்குவிப்பதுடன் ஜமாஅத் தோறும் கல்வி வழிகாட்டி மையங்கள் அமைப்பது காலத்தின் கட்டாயம்.... Colachel Azheem