Repeat students set to grab lion's share of MBBS seats
Dr.ஃபரூக் அப்துல்லா...
நீட் பரீட்சைக்கான சிலபஸ் என்பது CBSE என்பது நம் அனைவருக்கும் தெரியும்
Central Board of Secondary Education
நியாயமாக பார்த்தால் இந்த சிலபஸில் கடந்த ஆறு ஆண்டுகளாக பயிலும் ஒரு மாணவனோ மாணவியோ எளிதாக இந்த நீட் பரீட்சையை க்ராக் செய்து மருத்துவ சீட் வாங்க வேண்டும்.
இது தானே சரி..
ஆனால் நடப்பது என்ன???
இதே பாடத்திட்டத்தில் குறைந்தபட்சம் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயின்ற மாணாக்கர்கள் கூட நீட் பரீட்சையில் ஒரே முறையில் வெற்றி பெற்று மெடிக்கல் சீட் வாங்க முடிவதில்லை.
இதுவே உண்மை.
நீட் என்பது "Repeater's Test"
அதாவது எல்கேஜி முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை சிபிஎஸ்சி சிலபஸில் பயின்றிருந்தாலும் கூட அவர் தனியாக இந்த நீட்டுக்கு என்று கோச்சிங் எடுக்காவிடில் மெடிக்கல் சீட் மெரிட்டில் எடுப்பது மிக மிக கடினம்
இதற்காக என்ன செய்கிறார்கள் தெரியுமா?
நகரங்களில் வாழும் வசதி படைத்த மக்கள் தங்களது பிள்ளைகளை எட்டாம் வகுப்பு ஒன்பதாம் வகுப்பில் இருந்தே தினமும் மாலை நேரங்களில் நீட் பரீட்சைக்கான பிரத்யேக கோச்சிங் அனுப்புகிறார்கள்
( அவர்கள் செய்வதை நான் குறையோ குற்றமோ கூற மாட்டேன். காரணம் நானாகவே இருந்தாலும் எனது பிள்ளைகளுக்கு வாய்ப்பு உருவாக்கி தருவது எனது கடமை என்பதால் எனக்கு வசதி இருந்தால் பிள்ளைகளுக்கு என்ன தேவையோ அதை செய்வேன்)
அதாவது தங்களது பாடத்தையும் படித்துக்கொண்டு நீட்டுக்கான தேர்வு எழுதும் முறைகளையும் தினமும் படிப்பார்கள் இதற்கு வருடம் லட்ச ரூபாய் வரை எக்ஸ்ட்ரா செலவாகும்.
இத்தகைய கோச்சிங் சென்ட்டர்கள் மெட்ரோ மற்றும் இதர முக்கிய நகரங்களில் மட்டுமே உள்ளன.
சரி.. சிபிஎஸ்சி கூடவே இதுபோன்ற எக்ஸ்ட்ரா கோச்சிங் எடுத்து வந்தாலும் நீட்டில் சீட் போடுவது சுலபமா என்றால் அங்கு தான் "ரிப்பீட்டர்ஸ்"என்றொரு சொல் உள்ளே வருகிறது.
அது யார் அந்த ரிப்பீட்டர்ஸ்?
பனிரெண்டாம் வகுப்பு முடித்த கையோடு முதன்முதலில் எழுதும் நீட்டில் சீட் போட இயலாதவர்கள்
அடுத்த வருடம் ஒரு முழு வருடம் நகரங்களில் இருக்கும் கோச்சிங் சென்டர்களில் தங்கி / வீடு வாடகை எடுத்து தங்கி , லட்ச ரூபாய் செலவு செய்து ஒரு வருடம் முழுவதும் படித்தாலும் அனைவரும் சீட் போட முடியுமா என்றால்
அதுவும் உத்தரவாதம் கிடையாது.
அதற்குப்பிறகும் பலரும் ஒரு வருடம் மீண்டும் வீட்டிலேயே அமர்ந்து முழு வருடம் படித்தால் தான் சீட் கிடைத்திருக்கிறது
இதுதான் நீட் ஏற்படுத்தியிருக்கும் நிலை
பனிரெண்டாம் வகுப்பு முறையாகப் படித்து எழுதி நல்ல மதிப்பெண் வாங்கி
ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் ஒரே மாதிரி பரீட்சையும் சிலபஸும் வைத்து ஒரே மாதிரி புத்தகங்கள் வைத்து ஒரே மாதிரி கேள்விகள் எடுத்து
குடிசையில் வாழ்பவர் முதல் மாட மாளிகையில் வாழ்பவர் வரை அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கும் முறை சிறந்ததா
அல்லது
பணம் படைத்தவர்கள் வசதி மிக்கவர்கள் கடன் வாங்கி படிக்க முடிந்தவர்கள் நகரங்களில் தங்கி படிக்க முடிந்தவர்கள்
இவர்களுக்கு மட்டும் ஒத்திசைவு செய்யும் முறை சிறந்ததா
இவற்றுக்கெல்லாம் பதிலை அவரவர் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்
இதுபோன்ற பலருக்கும் அந்த கஷ்டங்கள் குறித்து நேரடி அனுபவம் கிடைத்திருக்காது
அவர்களுக்கும் இது குறித்து அறிந்து கொள்ள உதவும்
Dr.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை