Apply for Paramedical degree course

Share this article on :
Cover image

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்வி நிறுவனங்களில் துணை மருத்துவ பட்ட படிப்பு (Paramedical degree course) படிக்க தற்போது விண்ணப்பிக்கலாம்

https://www.facebook.com/wisdomkalvi/posts/1210442089329039/

துணை மருத்துப படிப்புகளுக்கு நீட் (NEET) மதிப்பெண் தேவை இல்லை, +2-ல் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். விண்ணப்பிக்க கடைசி தேதி 15-10-2020

B.P.T (Physiotherapy), B.Pharm, B.Sc (Nursing), B.ASLP, B.Sc Medical Laboratory Technology, B.O.T, B.Sc.Radiology & Imaging Technology, B.Optom, B.Sc Physician Assistant போன்ற 17 துணை மருத்து பட்ட படிப்புகள் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்வி நிறுவனங்களில் பயிற்றுவிக்கப்படுகின்றன.

அரசு மருத்துவ கல்லூரிகளில் துணை மருத்துவ பட்ட படிப்பிற்க்கு 1,552 இடங்கள் உள்ளன, இங்கு கல்வி கட்டணம் வருடத்திற்க்கு ரூ.3,000 மட்டுமே, அரசு ஒதுக்கீட்டில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி கட்டணம் வருடத்திற்க்கு ரூ.33,000 முதல் ரூ.45,000 வரை இருக்கும்.

கல்வி தகுதி : 12- ஆம் வகுப்பில் கீழ்காணும் பாட பிரிவை தேர்ந்தெடுத்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். a) இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry) மற்றும் உயிரியல் (Biology) b) இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry) மற்றும் தாவரவியல் (Botany), விலங்கியல் (Zoology)

குறைந்தது 40 % மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும்

வயது வரம்பு : 17 முதல் 30 வயது வரை

விண்ணப்பிக்கும் முறை : www.tnmedicalselection.org , https://tnhealth.tn.gov.in/ ஆகிய இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் To Apply : http://pmc.tnmedicalonline.xyz/Default.Html

ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதை நகல் (பிரின்ட் அவுட்) எடுத்து, கீழ்காணும் ஆணவங்களின் நகல்களை (Attested copy) இணைத்து A4 size cloth lined கவரில் கீழ்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும், இதற்க்கு கடைசி தேதி 17-10-2020

THE SECRETARY, SELECTION COMMITTEE, 162, PERIYAR E.V.R. HIGH ROAD, KILPAUK, CHENNAI – 600 010.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் : • 10-ஆம், 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (10th, +2 mark sheet) • 12-ஆம் வகுப்பு ஹால் டிக்கட் (+2 hall ticket) • மாற்று சான்றிதல் (Transfer Certificate) • சாதி சான்றிதழ் (Community Certificate) • குடும்பத்தில் முதல் பட்டதாரி என்றால், கல்வி உதவி பெற முதல் பட்டதாரி சான்றிதழ் (First graduate certificate) • 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளியில் படித்தற்க்கான சான்று

விண்ணப்ப கட்டணம் : ரூ.400

இந்த சேர்க்கை பற்றிய முழுவிபரம் கீழ்காணும் லின்கில் உள்ளது https://tnhealth.tn.gov.in/online_notification/notification/N20102559.pdf

துணை மருத்துவ படிப்புகள் பற்றிய முழுவிபரமும் நமது விஸ்டம் கல்வி வழிகாட்டியின் முந்தய பதிவில் உள்ளது பார்க்கவும் https://www.facebook.com/wisdomkalvi/posts/1069047306801852

துணை மருத்துவ படிப்புகள் பற்றி சந்தேகம் இருந்தாலோ, சேர்க்கை பற்றி கூடுதல் விபரம் தேவைபட்டாலோ கமெண்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்.

கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.

விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.

ஆக்கம் : S.சித்தீக் M.Tech