Scholarship from Chennai High Court

Share this article on :
Cover image

சென்னை உயர் நீதிமன்றத்தின் கல்வி உதவி தொகை அறிவிப்பு விண்ணப்பிக்க கடைசி தேதி : அக்டோபர் 30 (30-10-2020)

https://www.facebook.com/wisdomkalvi/posts/1219561981750383

கல்லூரிகளில் இளநிலை பட்ட படிப்பு (Degree) மற்றும் தொழில் நுட்ப பட்டய (Diploma) படிப்பு படிக்கும் மாணவ, மாணவியர்கள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்குமாறு சென்னை உயர்நீதி மன்றம் அறிவித்துள்ளது.

யார் விண்ணப்பிக்கலாம் ?

அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட பிரிவினர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் (இஸ்லாமியர்களில் மாணவிகள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்)

யார், யார் எல்லாம் விண்ணப்பிக்கலாம் என்ற விபரம் கீழ்காணும் உயர் நீதிமன்ற அறிவிப்பில் உள்ளது பார்க்கவும் https://districts.ecourts.gov.in/sites/default/files/SCHOLARSHIP%20APP%202019-20%20amd_0.pdf

எப்படி விண்ணப்பிப்பது ?

மூன்று பக்க விண்ணப்ப படிவத்தை உயர் நீதிமன்றம் தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது, பார்க்க https://districts.ecourts.gov.in/sites/default/files/SCHOLARSHIP%20APP%202019-20%20amd_0.pdf

இதை நகல் (பிரின்ட் அவுட்) எடுத்து, பூர்த்தி செய்து, மாணவர்கள் படிக்கும் கல்லூரியில் சான்று பெற வேண்டும். (3-வது பக்கத்தில் கல்லூரி முதல்வரின் கையெழுத்து பெற வேண்டும்)

பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கீழ்காணும் ஆவணங்களை இணைத்து, கீழ்காணும் முகவரிக்கு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 30-10-2020

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி :

தமிழ்நாடு அரசு பேராட்சியர் மற்றும் சொத்தாட்சியர் உயர் நீதிமன்ற வளாகம் சென்னை -600104

இணைக்க வேண்டிய ஆவணங்கள்

  1. சாதி சான்றிதழ் (Community certificate)
  2. வருமான சான்றிதழ் (Income certificate)
  3. கல்வி கட்டண ரசீது (Fee receipt)
  4. ஆதார் கார்ட் copy
  5. உங்களின் முகவரி எழுதிய 5 ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டிய என்வலப் (Self-addressed envelope with stamp for Rs.5/- affixed has to be enclosed)

விண்ணப்பிக்கும் முன் அறிந்து கொள்ள வேண்டியது :

👉 பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்க்கும் கீழ் இருக்க வேண்டும் 👉 வேறு எந்த கல்வி உதவிக்கும் விண்ணப்பித்து இருக்க கூடாது 👉 ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு மாணவர் (அல்லது மாணவியர்) மட்டுமே விண்ணப்பிக்க முடியும் 👉 விண்ணப்ப படிவத்தின் அனைத்து பகுதிகளும் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும், சிறு பிழை கூட இருக்க கூடாது, இணைக்க வேண்டிய அனைத்து சான்றிதழ்களையும் இணைக்க வேண்டும் (சான்றிதழ்களில் பிழை இருக்க கூடாது)

இந்த கல்வி உதவி தொகை பற்றி கூடுதல் விபரம் தேவைபடும் மாணவர்கள் கமெண்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்.

கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி https://www.facebook.com/wisdomkalvi பக்கத்தை Like செய்யுங்கள்.

விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.