Guidance for the Muslim students who cleared NEET
நீட் தேர்வில் வெற்றி பெற்ற முஸ்லிம் மாணவர்களுக்கு...
-
இதில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் 3,600 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 1,950 இடங்களும் உள்ளன.
சிறந்த மாணவர்கள் இவ்வாறு செய்தால், குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு,உள் ஒதுக்கீடான BC(M)-ல் மருத்துவ படிப்புக்கான இடம் கிடைக்கும். அதாவது, மதுரை மருத்துவக்கல்லூரியில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வில் இடங்கள் நிரப்பப்பட்டு விட்டால், அதன்பிறகு அந்த கல்லூரியை தேர்ந்தெடுக்கும் முஸ்லிம் மாணவருக்கு பி.சி.எம். ஒதுக்கீட்டில் இடம் வழங்கப்படும்.
2 . நல்ல மதிப்பெண் பெற்று பொதுப்பிரிவில் மருத்துவ இடம் பெறும் மாணவர்கள், தாங்கள் விரும்பிய மருத்துவ கல்லூரியில் கிடைக்கபெறாமல் இருந்தால், இறை திருப்திக்காகவும், சமுதாய முன்னேற்றத்திற்காகவும் தங்களுக்கு கிடைக்கும் அரசு மருத்துவகல்லூயை தேந்தெடுக்கவும். இதனால் குறைந்த மதிப்பெண் பெற்று மருத்துவ கனவுடன் இருக்கும் உங்கள் முஸ்லிம் சகோதரர்களை வாழ வைப்பது போன்றதாகும். பெரிய தர்மமாகும். இது சமுதாயத்துக்கு செய்யும் மிகப்பெரிய உதவியாகும்.
நாம் இணைந்து முன்னேறுவோம்.
வைகறை வெளிச்சம் மாத இதழ் சார்பாக...