Students success story in IIT-JEE Exam

Share this article on :

கன்னியாகுமாரி மாவட்டம் இரவிபுதூர்கடை எனும் சிற்றுரை சார்ந்த + 2 மாணவி ஆக்கிலா, NATIONAL PREMIER கல்வி நிலையமான - IISER, திருவனந்தபுரத்தில்5 வருட M.S படிப்பிற்கு IIT-JEE மூலம் தேர்வு பெற்று மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார்.

IIT/ IIM/ IIST வரிசையில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறையால் பத்தாண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டது தான் IISER (Indian Institute of Science Education and Research ) கல்வி நிறுவனங்கள். அப்துல் ஜப்பார், ஜாஸ்மின் அனீஸ் தம்பதிகளின் இரண்டாவது மகளான மாணவிஆக்கிலா தனது பள்ளிப்படிப்பை ஊருக்கு அருகாமையில் உள்ள Excel schoolல் படித்து + 2 வில் 98% மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக (school First) தேர்வு பெற்றார். இதனை நாம் நமது முந்தைய பதிவிலும் குறிப்பிட்டிருந்தோம்.

அண்மையில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட பொறியியல் தரவரிசை பட்டியலில் 11வது இடத்தையும், BC- M ல் முதல் மாணவியாகவும் ஏற்கனவே மாநில அளவில் சாதனைபடைத்துள்ளார். தற்போது IISER தேர்வு பெற்றதன் மூலம் தேசிய அளவிலும் சாதனை நிகழ்த்தியுள்ளார். IIT/ IIM/ IIST/IISER போன்ற NATIONAL PREMIER கல்வி நிலையங்களில் தமிழ்நாட்டிலிருந்து முஸ்லிம் மாணவிகளில் தேர்வு பெற்ற இரண்டாவது மாணவியாக மாணவி ஆக்கிலா இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது. அப்படி என்றால் அந்த முதல் மாணவி யார் என்ற கேள்வி எழுகிறதல்லவா ? அவர் இளம் விஞ்ஞானி மாஷா நஸீம் (2010 BATCH -IISER - BHOPAL) இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இருவரும் ஒரே ஊரை சார்ந்தவர்கள். இருவரும் உறவினர்களும் கூட. "மாஷா வின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின்பேரில்தான் இந்த சாதனையை என்னால் நிகழ்த்த முடிந்தது " என்று மகிழ்ச்சி பொங்க கூறுகிறார் சாதனை மாணவி ஆக்கிலா.

திருவனந்தபுரம், திருப்பதி, ஒடிசாவின் பெர்ஹம்பூர் , பூனே, போபால் ,பஞ்சாபின் மொஹாலி மற்றும் கொல்கத்தா ஆகிய ஏழு இடங்களில் IISER உள்ளது . சென்னையில் இல்லாதது வருந்த தக்கது.

IIT க்கு நிகராக அறிவியல் கல்வியை (Pure Science) கொண்டு செல்ல வேண்டும் என்ற முயற்சியில் ஒவ்வொரு சென்டரும் தலா 500 கோடி செலவில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறையால் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 500 படுக்கைகள் கொண்ட ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை துவங்குவதற்கான தற்போதைய செலவு தொகை 300 கோடி என்ற அளவில் இருக்கும் போது வெறும் 600 மாணவர்கள் படிக்கும் இந்த கல்விநிலையத்திற்கான செலவு 500 கோடி (2010 பட்ஜெட் )என்றால் இதன் பிரம்மாண்டத்தை புரிந்து கொள்ளலாம். மாஷா நஷீம் மற்றும் ஆக்கிலாவை பின்பற்றி புதிதாக துவக்கப்பட்டுள்ள இந்த அபூர்வமான இந்த கோர்ஸ் ஐ படிக்க முஸ்லீம் மாணவர்கள் முன்வரவேண்டும்.