Tamil Nadu students design world's lightest satellite
விண்வெளி தொழில்நுட்பத்தில் வியக்கதக்க சாதனைகளை புரிந்துவரும் தமிழக மாணவர்கள்
கரூர் பள்ளப்பட்டியை சேர்ந்த மாணவர் ரிஃபாத் ஷாருக் 2017-ஆம் ஆண்டு உலகின் குறைந்த எடை கொண்ட (64 கிராம்) செயற்கைகோளை தயாரித்தார். இந்த செயற்கைகோள் 2017-ஆம் ஆண்டு ஜூன் 22 -ஆம் தேதி அமெரிக்காவின் நாசா ஏவுதளமான Wallops Island-லிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு தஞ்சையை சேர்ந்த பொறியியல் மாணவர் ரியாசுதீன் மற்றுமொறு எடை குறைந்த (33 கிராம்) செயற்கைகோளை வடிவமைத்துள்ளார். இது அடுத்த ஆண்டு NASA விண்வெளி தளங்களில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.
கொரோனா காலத்தில் பள்ளி கூடங்கள், கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் முடங்கி போயுள்ள இந்த நேரத்தில், மக்கள் கடும் மன உளைச்சலை சந்தித்து வரும் வேளையில், அனைத்தையும் கடந்து ஆய்வுகளை தொடர்ந்து இந்த சாதனையை நிகழ்திய மாணவர் ரியசுதீனின் சாதனை பாராட்டிற்க்குறியதே.
இவர்கள் இருவருமே NASA-வின் "Cubes in Space" என்ற அறிவு சார் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்கள், இது வருட வருடம் நடக்கும் போட்டி, உலக அளவில் இருந்து பலர் கலந்து கொள்கின்றனர். 11 முதல் 18 வயது உட்பட்ட பள்ளி/கல்லூரி மாணவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். விபரம் இந்த இணையதளத்தில் https://www.cubesinspace.com/ உள்ளது.
ஆக்கம் : S.சித்தீக் M.Tech