Free NEET & IIT JEE Training - IMDAD
இலவச தங்கும் இடம், உணவு மற்றும் நீட் மற்றும் ஐ.ஐ.டி - ஜே.ஈ.ஈ சிறந்த பயிற்சி எம்.எஸ் லதீஃபி 40 அகடமி, ஹைதராபாத்
நமது பிள்ளைகள் 11 ஆவது மற்றும் 12ஆம் வகுப்பில் நுழையும் போது, கல்வி கட்டணம், டியுசன் மற்றும் நீட் பயிற்சி என லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டும். ஆனால் இவை அனைத்தையும் இலவசமாக பல ஆண்டுகளாக எம்.எஸ் லதீஃபி 40 அகடமி செய்து வருகிறது. மேலும் இந்த அகடமியில் படித்த பல மாணவ மாணவியர்கள் மருத்தவம் மற்றும் ஐ.ஐ.டியில் இணைந்துள்ளார்கள்.
தற்போது 10 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவ மாணவியருக்கு ஆன்லைன் மூலம் தகுதி தேர்வு நடத்தி, சிறந்த 40 மாணவ மாணவிகளை தேர்வு செய்து, அவர்களுக்கு இலவச தங்கும் இடம், உணவு மற்றும் நீட் மற்றும் ஐ.ஐ.டி - ஜே.ஈ.ஈ க்கான சிறந்த பயிற்சியினை ஹைதராபாத்தில் உள்ள எம்.எஸ் லதீஃபி 40 அகடமி வழங்கி வருகிறது. இதனுடன் 11ஆம் மற்றும் 12ஆம் வகுப்புகளும் மாணவ மாணவியருக்கு நடத்தி தேர்வுகளில் பங்கெடுக்க வைக்கப்படுவார்கள். வரும் கல்வி ஆண்டுக்கான மாணவ மாணவியர் சேர்க்கைகான தேர்வு ஆன்லைன் மூலம் 30ஆம் தேதி ஜனவரி மற்றும் 7 ஆம் தேதி பிப்ரவரி நடத்தப்படும்
இந்த தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் வாங்குபவர்களே இந்த அகடமியில் தங்கி பயில முடியும் என்ற அடிப்படையில் இம்தாத் இந்தியா இந்த தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வகையில் இலவச சிறப்பு பயிற்சியை சென்னை மற்றும் தென்காசி மாவட்டம் கடையநல்லுாரில் வைத்து தரவுள்ளது. இந்த எம்.எஸ் லதீஃபி 40 அகடமி தேர்விலும் தேர்வானால் ஹைதராபாத்தில் தங்கி பயில விரும்பும் மாணவ மாணவியர் கீழ்கண்ட லிங்கில் பதிவு செய்யுமாறு அன்போடு கேட்டுகொள்கிறோம்.
பதிவு செய்ய இறுதி நாள் - 25 ஜனவரி 2021
இடம் - சென்னை, அல்பலாஹ் அகடமி, அடையார் பள்ளிவாசல் வளாகம் பயிற்சி நாட்கள் - 28 ஆம் ஜனவரி முதல் 31 ஆம் ஜனவரி வரை நேரம் - காலை 10 மணி முதல் 1 மணி வரை
இடம் - கடையநல்லுார், தென்காசி (ஆண்கள் மட்டும்) பயிற்சி நாட்கள் - 23 ஆம் ஜனவரி முதல் 31 ஆம் ஜனவரி வரை தங்கி பயில வேண்டும். உணவு, தங்கும் இடம் இலவசம்
பதிவு செய்ய வேண்டிய லிங்க்
இம்தாத் இந்தியா imdadindiahq@gmail.com