Job in Indian Embassy of Dubai! Monthly Salary 8500 Dirham
UAE: இந்திய துணை தூதரகத்தில் வேலை..!! மாத சம்பளம் 8,500 திர்ஹமிற்கும் மேல்..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?? | Khaleej Tamil
துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் அதன் பத்திரிகை மற்றும் தகவல் பிரிவில் உதவியாளர் வேலைக்கு தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தற்பொழுது தெரிவித்துள்ளது. இந்த வேலையில் சேரும் நபருக்கு மாத சம்பளமாக 8,500 திர்ஹமிற்கும் அதிகமாக வழங்கப்படும் என்றும் துணை தூதரகம் தெரிவித்துள்ளது.
தற்பொழுது அறிவித்திருக்கும் இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு 7,200 திர்ஹம் சம்பளம் மற்றும் ஏறக்குறைய 1,368 திர்ஹம்ஸ் அலவன்ஸ் வழங்கப்படும் என்றும் அதனுடன் தூதராகத்தால் சுகாதார காப்பீடும் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வேலைக்கான தகுதி
விண்ணப்பதாரர் முதுகலை பட்டதாரியாக கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆங்கிலம் அல்லது ஊடக தொடர்பு அல்லது பத்திரிகை துறைகளின் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அதே போல், ஊடகங்கள் அல்லது அது தொடர்புடைய தொழில்களில் பணி அனுபவம் உள்ள நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். அரபு மொழியும் தெரிந்திருப்பது சிறந்தது. பத்திரிகை வெளியீடுகள் மற்றும் அறிக்கைகளைத் தயாரிப்பதில் சிறந்த திறன்களைக் கொண்டிருத்தல், சமூக ஊடகங்கள் உள்ளிட்ட ஊடகங்களைக் கையாள்வது போன்றவை தெரிந்திருத்தல் வேண்டும்.
விண்ணப்பித்த நபர்களில் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே அவர்களின் விபரங்களை வைத்து தேர்ந்தெடுக்கப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://form.jotform.com/210601468099457 என்ற லிங்கில் சென்று ஆன்லைனில் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இறுதி தேதி மார்ச் 14, 2021 என்று துணை தூதரகம் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.