Career Guidance to Pursue Law as a Career

Share this article on :

12ஆம் வகுப்பு  முடித்த மாணவர்களுக்கு ஓர் சிறந்த வாய்ப்பு. சட்டப் படிப்பை உயர்கல்வியாக தேர்வு செய்து படிப்பதால் வருங்காலத்தில் வழக்கறிஞராக பணியாற்றுவதையும் கடந்து  CIVIL JUDGE , APP தேர்வுகளில் வெல்வதன் மூலம் அரசு பணிகளில் அமர்ந்து இந்த  சமுதாயத்தில் தங்களுக்கும் தன் குடும்பத்திற்க்கும் ஓர் அந்தஸ்த்தை பெற முடியும்.

மேலும் TNPSC தேர்வுகளில் சட்டம் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கபடுகிறத்து. தேசிய அளவிலான UPSC தேர்வுகளில் சட்டப் படிப்பை படித்தவர்கள் எளிதாக தேர்ச்சி அடைகிறார்கள். CORPORATE கம்பெனிகளில் சட்ட ஆலோசகராக பணிபுரிய வாய்ப்புகளும் உண்டு. IT துறையிலும் சட்டம் படித்தவர்களுக்கு என வேலை வாய்ப்புகள் உள்ளது.

சட்டம் பயில்வதால் அடக்குமுறைகளை வென்று மிக எளிதில் உங்களுடைய உரிமைகளை நிலைநாட்டிட முடியும்.

மகாத்மா காந்தி , நேரு, அம்பேத்கர்,பழனி பாபா முதல் இன்றைய அரசியல் ஆளுமைகள் பலரும் சட்டம் படித்தவர்களே. சட்டம் பயில்வதால் வருங்காலத்தில்  நீங்களும் ஒரு மிக சிறந்த ஆளுமைகளாக உருவெடுக்க முடியும்.

எவ்வாறு படிக்கலாம்?

இரண்டு வகையான சட்ட படிப்புகள் இருக்கின்றது,

5 ஆண்டு சட்டப்படிப்பு (5years course) - 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்த சட்டப் படிப்பை படிக்கலாம்.

3 ஆண்டு சட்டப்படிப்பு (3years course) – இளங்கலை(UG) பட்டம் பெற்றவர்கள் இந்த சட்டப் படிப்பை படிக்கலாம்.

எங்கே படிக்கலாம்?

அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரிகள்:

தகுதி: 12 ஆம் வகுப்பு முடித்த அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

முஸ்லிம்களுக்கு 3.5% இட ஒதுக்கீடு உண்டு.

வயது வரம்பு: கிடையாது, அனைத்து வயதினரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் www.tndalu.ac.in  எனும் இணையத்தில் ஆன்லைனிலும்,அந்தந்த சட்டக்கல்லூரிகளில் நேரடியாகவும் வாங்கி கொள்ளலாம்.

தமிழகத்தில்

1.சென்னை

2.மதுரை

3.திருச்சி

4.கோவை

5.திருநெல்வேலி

6.செங்கல்பட்டு

7.வேலூர்

8.விழுப்புரம்

9.தர்மபுரி

10.இராமநாதபுரம்

11.சேலம்

12.நாமக்கல்

13.தேனி ஆகிய இடங்களில் அரசு சட்டக்கல்லூரிகள் உள்ளன.

நுழைவு தேர்வு/தகுதி தேர்வு எதுவும் கிடையாது. பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களை  வைத்தே கல்லூரியில் இடம் கிடைக்கும்.

ஆங்கிலம்/தமிழ் இரு மொழிகளிலும் சட்டம் படிக்கலாம்.

ஒரு ஆண்டிற்கான படிப்பு செலவு ரூ.3000 க்குள்ளாகவே ஆகும்.

அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம்:

தகுதி: 12ஆம் வகுப்பில் 70℅ மதிப்பெண் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: கிடையாது அனைத்து வயதினரும் விண்ணப்பிக்கலாம்.

முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு உண்டு.

விண்ணப்பம் www.tndalu.ac.in  எனும் இணையத்தில் ஆன்லைனிலும், சென்னையில் உள்ள அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் நேரடியாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

நுழைவு தேர்வு/தகுதி தேர்வு எதுவும் கிடையாது. பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களை  வைத்தே கல்லூரியில் இடம் கிடைக்கும்.

தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள்

தேசிய அளவில் சட்டம் பயில நுழைவுத்தேர்வுகள்:

           இந்தியாவெங்கும் உள்ள கல்லூரிகளில் சட்டப் படிப்பில் சேர CLAT போன்ற பல்வேறுவிதமான நுழைவுத்தேர்வுகளை எழுத வேண்டியுள்ளது. இவ்வகையான தேர்வுகளை எளிதில் வெற்றிகொள்ள, குறிப்பாக, 5 பாடங்கள் அல்லது தேர்வு பகுதிகளை சிறப்பாக படிக்க வேண்டியுள்ளது.

 ஆங்கிலப் புலமை:

         சட்டப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில், ஆங்கிலப் புலமை முக்கியமான பங்கை வகிக்கிறது. ஆங்கில மொழியின் கீழ்கண்ட மூன்று அம்சங்களில் ஒருவர் தனது அறிவை வளர்த்துக் கொள்வது இன்றியமையாதது. அவை,

வார்த்தைவளம்(Vocabulary) 

இலக்கணம் மற்றும் சொற்றொடர் திருத்தம்(Grammar & Sentence correction)\ வாசித்து புரிந்துகொள்ளல்(Reading comprehension)

 வார்த்தை வள மேம்பாடு:

             உங்களின் பாடப்புத்தகம், செய்தித்தாள்கள் உள்ளிட்ட பல்வேறுவிதமான தினசரி அம்சங்களின் மூலமாக, கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி, உங்களின் Vocabulary திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோன்று, சில பயனுள்ள பயிற்சி புத்தகங்களைப் பயன்படுத்தி, இலக்கணம் மற்றும் சொற்றொடர் திருத்தப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ரென் மற்றும் மார்ட்டின் ஆகியோர் எழுதிய High school English Grammar and Composition என்ற புத்தகம், ஆங்கில இலக்கண அறிவை வளர்த்துக் கொள்வதற்கு, ஒரு பயனுள்ள புத்தகமாகும்.

             புரிந்துகொள்ளும் திறனை வளர்த்துக்கொள்ள, அதிகளவு படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆங்கில மீடியம் படிக்காத மாணவர்கள், தங்களின் ஆங்கிலத் திறனை வளர்த்துக்கொள்ள, தினமும் சில மணிநேரங்கள் தவறாமல், ஆங்கில மொழிப் பயிற்சியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

கிளாட் தேர்வில் ஆங்கில கேள்விகள்:

         கிளாட் தேர்வைப் பொறுத்தவரை, ஆங்கிலப் பாடம் தொடர்பான கேள்விகள் பின்வரும் முறைகளில் கேட்கப்படும். அவை,

English Comprehension\ Fill up the blanks\ Spelling Test\ Vocabulary - synonyms, antonyms including Latin, French and legal terms\ Phrasal verbs, idioms and phrases\ Para jumbles\ Sentence correction tests

பொதுஅறிவு மற்றும் உலக நடப்புகள்

                  சட்டப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வுகளில், பொது அறிவு என்பது மிகவும் முக்கியமான பகுதியாகும். எனவே, தினமும் தவறாமல், நல்ல செய்தித்தாளை படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு ஆண்டுக்கு, குறைந்தபட்சம் 6 Past issues -ஐ படிப்பது சிறந்தது. ஒரு ஆண்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை படித்து மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். தேவையானவற்றை குறிப்பெடுத்துக் கொள்வதும் அவசியமானது.

முக்கியமான தலைப்புகள்:

            சர்வதேச பொருளாதாரம், வர்த்தகம், நிதி தொடர்பான விஷயங்கள், ஐ.நா அமைப்பு மற்றும் அது தொடர்பான ஏஜென்சிகளின் செயலபாடுகள், உலக வங்கி மற்றும் ஐ.எம்.எப் போன்ற அமைப்புகள் ஆகிய முக்கிய சர்வதேச அம்சங்கள் குறித்து, தேர்வுக்கு தயாராவோர் கவனம் செலுத்த வேண்டும். இணையதளங்களில், பொதுஅறிவு போர்டல் சென்று, கடைசி ஆறுமாத விஷயங்களை நன்கு படித்துக் கொள்ளவும். மலையாள மனோரமா போன்ற புத்தகங்களும் பயன்தரும்.

லாஜிக்கல் ரீசனிங்:

              ஒரு மாணவரின் தர்க்க திறமை மற்றும் அறிவை சோதிக்க, இந்தப் பகுதி இடம்பெற்றுள்ளது. பல்வேறு வகையான லாஜிக்கல் ரீசனிங் கேள்விகள் இப்பகுதியில் கேட்கப்பட்டிருக்கும். பொதுவாக, சட்டப் படிப்பு நுழைவுத் தேர்வுகளில், வீசுவல் மற்றும் non - verbal reasoning போன்றவை சோதிக்கப்படுவதில்லை.

நேர மேலாண்மை முக்கியம்:

             தேர்வெழுதுகையில், நேரத்தை மிகச் சரியாக கடைபிடிப்பது மிக மிக அவசியம். தேவையின்றி, எந்த கேள்விக்கும் அதிக நேரத்தை வீணாக்கிவிடக்கூடாது. இத்தகைய நேர மேலாண்மையை சரியாக கடைபிடிக்க வேண்டுமெனில், தொடர்ச்சியான பயிற்சியே அதற்கு தீர்வாகும்.

Legal aptitude/Legal awareness:

          லீகர் ரீசனிங் கேள்விகளில் ஒருவர் நிபுணத்துவம் பெற வேண்டுமெனில், குற்றச் செயல்கள், ஒப்பந்தங்கள், சட்டவிரோத செயல்கள், குடும்பச் சட்டம் மற்றும் பொது விதிமுறைகள் குறித்த அனைத்து விஷயங்களையும் நன்கு படித்து, ஆராய வேண்டும். இதற்கு தேவையான, பொருத்தமான புத்தகங்களைப் படிக்க வேண்டும்.

சட்ட செய்திகளைக் கேட்டல்:

         சட்டம், நீதிமன்றங்கள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் குறித்த தகவல்கள், சட்ட பொது அறிவுக் கேள்வியில் மிக முக்கியமானவை. எனவே, அவை தொடர்பான செய்திகளை எப்போதும் கவனமாக கேட்டு, நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் நிகழும் சட்டம் தொடர்பான நிகழ்வுகள், புகழ்பெற்ற நீதிமன்ற தீர்ப்புகள் போன்றவைகளை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

           நாட்டின் முக்கிய செய்தித்தாள்களில், சட்டம் தொடர்பான நிகழ்வுகள் அடிக்கடி இடம்பெறும். அவற்றை குறிப்பெடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

கணிதம்:

             பள்ளிப் பாடத்தில், 10ம் வகுப்பு வரை உள்ள கணிதத்தில், ஒருவரின் அறிவு சோதிக்கப்படும். இலாபம், நட்டம், விகிதாச்சாரம், அளவு, வித்தியாசம், எளிய மதிப்பீடு, சராசரிகள், நேரம் மற்றும் பணி, நேரம் மற்றும் தூரம் போன்ற அம்சங்களைத் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். இதற்கு தயாராக, ஆர்.எஸ்.அகர்வால் ஆப்ஜெக்டிவ் மேதமேடிக்ஸ் புத்தகம் போன்ற ஒரு புத்தகத்தை படிப்பது சிறந்தது. பள்ளி கணிதப் புத்தகங்களை படிப்பது மிகவும் முக்கியம். அதேசமயம், டெல்லி பல்கலை நடத்தும் 3 வருட எல்.எல்.பி. தேர்வில் கணிதக் கேள்விகள் கேட்கப்படுவதில்லை.

டெல்லி பல்கலையின் LLB நுழைவுத்தேர்வு

           இத்தேர்வில், பொதுஅறிவு, ஆங்கிலம் மற்றும் சட்டத் திறன் ஆகிய மூன்று பகுதிகள் உள்ளன. சில சமயங்களில், லாஜிகல் மற்றும் அனலிடிகல் ரீசனிங் கேள்விகள் அதிகளவில் கேட்கப்படும். ஆனால், எப்போதும் அவ்வாறு கேட்கப்படுவதில்லை.

            முந்தைய ஆண்டுகளில் கேள்வித்தாள்களைப் படிப்பதும் அதிக நன்மை பயக்கும். மொத்தம் 175 கேள்விகளில், 100 கேள்விகளுக்கும் மேலாக, சமீபத்திய ஆண்டுகளின் கேள்வித்தாள்களில் கேட்கப்பட்ட பொதுஅறிவு/நடப்பு நிகழ்வுகள் ஆகியவை கேட்கப்படும்.

         டெல்லி பல்கலை நடத்தும் தேர்வில், சட்ட திறனாய்வு கேள்விகள், பெரும்பாலும், சட்டப் பொதுஅறிவு அல்லது சட்ட விழிப்புணர்வு போன்ற பகுதிகளிலிருந்தும், சில கேள்விகள் லீகல் ரீசனிங் ஆகிய பகுதியிலிருந்தும் கேட்கப்படும்.

எல்சாட் தேர்வு

               இது சட்டப்பள்ளி நுழைவுத் தேர்வு என்று அழைக்கப்படுகிறது. ஜிண்டால் குளோபல் சட்டக் கல்வி நிறுவனம் மற்றும் ஐஐடி-காரக்பூர் போன்றவை இத்தேர்வின் மதிப்பெண்களை ஏற்றுக்கொள்ளும் முக்கிய கல்வி நிறுவனங்களில் சில. www.pearsonvueindia.com/Isatindia என்ற வலைதளம் சென்று மாணவர்கள், தங்களுக்கு தேவையான விபரங்களை அறியலாம். மேலும், அதிகாரப்பூர்வ எல்சாட் இந்தியா கையேட்டையும் வாங்கி பயன்பெறலாம். இத்தேர்வைப் பொறுத்தவரை, பொதுஅறிவு, இலக்கணம், லீகல் ரீசனிங், கணிதம் போன்ற அம்சங்கள் கிடையாது.

இளம் வழக்கறிஞர்களுக்கு அரசு உதவித்தொகை

அரசு சட்டக்கல்லூரிகளில் சட்டம் படித்து முடிக்கும் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ₹3000/- என முதல் மூன்று ஆண்டுகளுக்கு உதவித்தொகையை அரசே வழங்கி வருகிறது.