Para Medical Courses

Share this article on :

துணைமருத்துவ படிப்புகள் (Para-Medical)

👉 Para-Medical படிப்பிற்க்கான எதிர்கால வேலை வாய்ப்புகள் என்ன ? 👉 Para-Medical-ல் எந்த பிரிவு எடுக்கலாம் ?

மருத்துவமனைகளில், டாக்டர்களின் எண்ணிக்கையை விட, மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும்.

மருத்துவம் செய்வதற்க்கு உதவவும், மருத்துவர்களுக்கு உதவவும், பல துணை மருத்துவ படிப்புகள் (Para-Medical courses) பயிற்றுவிக்கப்படுகின்றன. அவற்றை பற்றி விரிவாக பார்ப்போம்

தமிழகத்தில் துணை மருத்துவ படிப்புகள் படிக்க நீட் (NEET) தேர்வு அவசியம் இல்லை, +2 தேர்வில் இயற்பியல் (Physics) , வேதியியல் (Chemistry) , உயிரியல் (biology) அல்லது இயற்பியல் (Physics) , வேதியியல் (Chemistry), தாவரவியல் (botny) , விலங்கியல் (zoology) ஆகிய பாடங்களில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையிலேயே துணை மருத்துவ படிப்புகளுக்கு சேர்க்கைகள் நடைபெறுகின்றது.

மிகவும் சொற்ப்பமான சில மருத்துவ படிப்புகளுக்கு இயற்பியல், வேதியியல், கணிதம் (mathematics) படித்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்வி நிறுவனங்களில் உள்ள துணை மருத்துவ படிப்புகளில் சேர, தமிழக அரசு கீழ்காணும் மூன்று கவுன்சிலிங்களை (para medical counseling) நடத்துகின்றது.

  1. துணை மருத்துவ பட்ட படிப்பு (PARAMEDICAL DEGREE COURSES)
  2. Diploma in Nursing
  3. துணை மருத்துவ டிப்ளோமா / சான்றிதழ் படிப்புகள் (PARAMEDICAL DIPLOMA/CERTIFICATE COURSES)

இதற்க்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் மாதத்தில் விணியோகிக்கப்படும்.

துணை மருத்துவ படிப்புகளில் என்ன படிக்கலாம் ?

தற்போதைக்கு மருந்து தயாரிக்கும் துறை (Pharma Industry) , மருத்துவ பரிசோதனை துறை (Diagnostic industry) ஆகியவை வளர்ந்து வரும் துறைகள். எனவே இந்த துறை சார்ந்த படிப்புகளை படிக்கலாம்.

  1. B.Pharm
  2. B.Sc Medical Laboratory Technology
  3. B.Sc. Radiology & Imaging Technology

வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பது செவிலியர் பணிகள் (Nursing) , எனவே இந்த படிப்புகளையும் படிக்கலாம்

  1. B.Sc.(Nursing)

மருந்தில்லா மருத்துவ முறைகளான, physiotherapy and occupational therapy ஆகிய படிப்புகளையும் படிக்கலாம்

  1. B.P.T (physiotherapy)
  2. B.O.T (occupational therapy)

இது போக

  1. B.Optom. (Optometry)
  2. Bsc in Dialysis Technology
  3. Bsc in Medical Record Science
  4. B.Sc. Radio Therapy Technology
  5. B.Sc Respiratory Therapy
  6. B.Sc. Cardio-Pulmonary Perfusion Technology
  7. B.Sc Critical Care Technology
  8. B.Sc Cardiac Technology
  9. B.Sc Operation Theatre & Anesthesia Technology
  10. B.Sc Accident & Emergency Care Technology

என்று பல படிப்புகள் உள்ளன. மருத்துவத்தில் எந்த துறையில் மாணவர்களுக்கு சேவையாற்ற விருப்பம் உள்ளதோ அந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.

எந்த கல்லூரியில் படிக்கலாம் ?

மாணவர்கள், அரசு மருத்துவ கல்லூரிகளையே (government medical college) தேர்ந்தெடுங்கள், கல்வி கட்டணம் மிக குறைவாக இருக்கும். வேலைவாய்ப்புகளும் எளிதில் கிடைக்கும், ஏழை , எளிய மக்களுக்கு சேவையாற்றலாம். (இதற்க்கு +2 -ல் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும்)

அடுத்ததாக மருத்துவமனைகளோடு இணைதிருக்கும் கல்வி நிறுவனங்கள், இங்கு சேர அதிக மதிப்பெண் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கல்வி கட்டணம் மிக அதிகமாக இருக்கும்

வேலைவாய்ப்புகள் :

எந்த துறையில் வேலைவாய்ப்புகள் குறைந்தாலும் மருத்துவ துறை வேலைவாய்ப்புகள் குறையாது. மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க மருத்துவ துறை வேலைவாய்ப்புகளும் அதிகரித்து கொண்டே இருக்கும். மருத்துவமனைகள் (hospitals), மருந்து தயரிப்புகள் (Pharma Industry), மருத்துவம் சார்ந்த ஆராய்சி (Medical Research), மருத்துவ பரிசோதனை (Diagnostic industry) போன்ற பல துறைகளில் துணை மருத்துவ படிப்பு படித்த மாணவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளன

PharmD படிக்கலாமா ?

இந்தியாவில் Pharma துறையில் பணியாற்ற நான்கு ஆண்டு B.Pharm படிப்பு பயிற்றுவிக்கப்படுகின்றது. PharmD என்பது 6 ஆண்டு படிப்பு, Pharma துறையில் clinical pharmacy-யை மையப்படுத்திய படிப்பு. அமெரிக்காவை பொருத்தவரை 6 ஆண்டு PharmD படித்தவர்களுக்கே Pharma துறையில் நல்ல வாய்ப்புக்கள் உள்ளது.

தற்போது PharmD படிப்பு இந்தியாவில் பிரபலமாகி வருகின்றது. இந்தியாவை பொருத்தவரை B.Pharm, PharmD என்ற இரண்டிற்க்கும் சமவாய்ப்புகளே உள்ள என்று என்றே சொல்லலாம். கல்வி கட்டணம் B.Pharm படிப்பை விட PharmD படிப்பிற்க்கு அதிகம். வெளிநாடுகளில் பணியாற்ற PharmD படிப்பு உதவியாக இருக்கும். ஆனால் வெளிநாடுகளில் வேலைவாங்குவது அவ்வளவு எளிதல்ல, வெரும் படிப்பிற்க்கு யாரும் எங்கும் வேலை தருவதில்லை.

எனவே என்னுடைய அறிவுரை B.Pharm படிப்பையே படிக்கலாம்.தேவை என்றால் 2 ஆண்டு M.Pharm படித்து கொள்ளலாம். அதிக அளவு பொருளாதாரம் உள்ள மாணவர்கள் PharmD படிக்கலாம்.

துணை மருத்துவ படிப்புகள் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு!

இயன்ற வரை +2 தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து கவுன்சிலிங் மூலமாக அரசு மருத்துவ கல்லூரியில் சேருங்கள். பொருளாதார வசதி இருந்தால் மட்டும் தனியார் கல்லூரிகளில் சேருங்கள். கடன் வாங்கி வட்டிக்கு வாங்கி படிக்க வேண்டாம்.

ஏனென்றால் மருத்துவ துறையில் உள்ள பெரும்பாலான பணிகளில் அதிகமாக சம்பாதிக்க முடியாது. மருத்துவ துறை என்பது சேவை (Service) சார்ந்தது, எனவே சேவை மனப்பான்மை இருந்தால் மட்டும் மருத்துவ துறை படிப்புகளை தேர்ந்தெடுங்கள்

மருத்துவ துறையின் வளர்சிக்கு தொழில் நுட்பங்கள் தற்போது உதவி வருகின்றன. எனவே மாணவர்களுக்கு அறிவுடன் கூடிய மருத்துவ அறிவுடன் கூடிய தொழில் நுட்ப அறிவும் அவசியம்

படிப்பை (Degree) மட்டுமே அடிப்படையாக கொண்டு வேலை வழங்கிய காலம் முடிந்துவிட்டது, மாணவர்களின் அறிவையும் (knowledge), திறமையையும் (Skill) அடிப்படையாக கொண்டே வேலைகள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன. வெரும் பட்ட படிப்பை மட்டும் முடித்து விட்டால் வேலை வாங்கிவிடாலம் என்ற நிலை தற்போது இல்லை. பட்ட படிப்போடு சேர்த்து அறிவும், திறமையும் இருந்தால் தான் இப்போது நல்ல வேலை கிடைக்கும்.

வெரும் துணை மருத்துவ படிப்புகளுக்கென்று தனியாக மதிப்பு கிடையாது. உங்கள் அறிவோடும், திறமையோடும் படிப்புகள் சேரும் போது, அந்த படிப்பு மதிப்பு மிக்கதாகின்றது. உங்களுக்கும் அந்த படிப்பு மிக பெரும் நன்மைகளை தருகின்றது. இன்னும் விரிவாக அறிந்து கொள்ள “எப்படி படித்தால் நல்ல வேலை கிடைக்கும் ?” https://www.facebook.com/wisdomkalvi/posts/1060766457629937 என்ற கட்டுரையை முழுமையாக வாசிக்கவும்.

தொடரும்...............இன்னும் பல தலைப்புகளில் வரும் நாள்களில் பல கல்வி வழிகாட்டி கட்டுரைகள் நமது Wisdom கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தில் வரவுள்ளது. அனைத்தையும் படித்து பயன் பெறுங்கள்.

நமது www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.

நமது Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.

ஆக்கம் : S.சித்தீக் M.Tech https://www.facebook.com/wisdomkalvi/posts/1401831726856740

#Wisdomவெற்றிப்பாதை_2021