Agricultural Studies Awareness

Share this article on :

வேளாண் துறை (Agriculture) படிப்புகள்

மனிதன் பூமியில் கால்பதித்த காலத்திலிருந்து இருப்பது வேளாண் (Agriculture) துறை. Ever Green துறைகளில் வேளாண் (Agriculture) துறையும் ஒன்று.

வேளாண்மை, இயற்கை மருத்துவம், உணவு உற்பத்தி, உணவு விணியோகம் ஆகிய துறைகளில் விருப்பம் உள்ள மாணவர்கள் மட்டும் வேளாண் படிப்புகளை தேர்ந்தெடுக்கலாம்.

தமிழக அரசின் வேளாண் பல்கலை கழகத்தின் (https://tnau.ac.in/) கீழ் 16 அரசு வேளாண் கல்லூரிகள் மற்றும் 28 தனியார் வேளாண் கல்லூரிகள் உள்ளன.

வேளாண் படிப்புகள் படிக்க நுழைவு தேர்வு இல்லை, +2-ல் மாணவர்கள் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை (Admission) நடைபெறும்.

தகுதி : +2 -ல் கீழ்காணும் பிரிவுகள் படித்த மாணவர்கள் வேளாண் படிப்புகள் படிக்க தகுதியானவர்கள்

  1. இயற்பியல், வேதியியல், உயிரியல் கணிதம் (Maths, Phy, Chem, bio)
  2. இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் (Phy, Chem, bot, zoo)
  3. இயற்பியல், வேதியியல், உயிரியல், வேறு ஏதேனும் ஒரு பாடம் (Phy, Chem, bio, any one subject)
  4. ஒரு சில பிரிவுகளுக்கு இயற்பியல், வேதியியல், கணிதம், கணிணி அறிவியல் (Maths, Phy, Chem, CS) படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்

குறைந்தது 50 % மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும், 21 -வயதிற்க்குள் இருக்க வேண்டும்.

பயிற்றுவிக்கப்படும் படிப்புகள் :

  1. B.Sc.(Hons.) Agriculture
  2. B.Sc.(Hons.) Horticulture
  3. B.Sc.(Hons.) Forestry
  4. B.Sc.(Hons.) Food, Nutrition and Dietetics
  5. B.Tech. (Agricultural Engineering)
  6. B.Sc.(Hons.) Sericulture
  7. B.Tech. (Food Technology)
  8. B.Tech. (Biotechnology)
  9. B.Tech. (Energy and Environmental Engineering)
  10. B.Sc. (Hons.) Agri-Business Management

வேளாண் (Agriculture) படிப்புகள் படிக்கலாமா ?

வேலைவாய்ப்பை மட்டும் இலக்காக கொண்ட மாணவர்கள் வேளாண் படிப்பிற்க்கு விண்ணப்பிக்க வேண்டாம். அதற்க்கு வேறு படிப்புகள் உள்ளது. அரசு வேலை கிடைக்கும் என்று நம்பியும் வேளாண் படிப்புகளை படிக்க வேண்டாம், பெரும்பாலான அரசு வேலைகள் TNPSC மற்றும் மத்திய, மாநில அரசு தேர்வு வாரியங்கள் நடத்தும் தேர்வுகளில் (competitive exams) வெற்றி பெறுவதன் மூலமே கிடைக்கும். உடனடி வேலை வாய்ப்பை எதிர்பார்க்காமல், உலக மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்வது, ஆரோக்கியம் உள்ள சமூகத்தை உருவாக்குவது, இயற்க்கை மருத்துவத்தை மேம்படுத்துவது ஆகிய உயரிய குறிக்கோள்களுடன் வேளாண் (Agriculture) படிப்பை தேர்ந்தெடுத்து படியுங்கள்.

தொடரும்...............இன்னும் பல தலைப்புகளில் வரும் நாள்களில் பல கல்வி வழிகாட்டி கட்டுரைகள் நமது Wisdom கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தில் வரவுள்ளது. அனைத்தையும் படித்து பயன் பெறுங்கள்.

நமது www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.

நமது Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.

ஆக்கம் : S.சித்தீக் M.Tech https://www.facebook.com/wisdomkalvi/posts/1407484396291473