CUCET Exam
இந்தியாவில் உள்ள அனைத்து மத்திய பல்கலை கழகங்களில் (Central Universities) B.A/B.Sc/M.A/M.Sc/PhD படிக்க CUCET தேர்வு
தமிழகத்தில் திருவாரூரில் உள்ள மத்திய அரசின் மத்திய பல்கலை கழகம் உட்பட இந்தியாவில் உள்ள 12 மத்திய பல்கலை கழகங்களில் B.A, B.Sc, B.Ed மற்றும் M.A, M.Sc, M.B.A, மற்றும் M.Phil, Phd படிக்க CUCET என்ற தேர்வு ஆண்டு தோறும் நடத்த படுகின்றது, அதற்க்கு தற்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 1 (1-09-2021).
மருத்துவம் (Medicine), பொறியியல் (Engineering) படிப்பில் சேர விருப்பம் இல்லாதவர்கள், இந்த தேர்வை எழுதி மத்திய பல்கலை கழகத்தில் கலை, அறிவியல் (Arts and Science) படிப்புகள் படிக்கலாம், சிறந்த மேற்படிப்புகளுக்கும், வேலை வாய்ப்பிற்க்கும் மிக சிறந்த வாய்ப்பு இது. கல்வி கட்டணமும் குறைவுதான், அரசு கல்வி உதவியும் எளிதில் கிடைக்கும்.
B.A, B.Sc படித்து வேலை தேடுபவர்கள், M.A, M.Sc படிக்க ஆர்வம் உள்ளவர்கள் இந்த தேர்வை எழுதி மத்திய பல்கலை கழகத்தில் M.A, M.Sc படிப்புகள் படிக்கலாம், உங்களின் வேலைவாய்ப்பிற்க்கும் , ஆராய்ச்சி படிப்பிற்க்கும் மிக சிறந்த வாய்ப்பு.
கல்வி தகுதி :
+2 படித்தவர்கள், இந்த ஆண்டு +2 தேர்வு எழுதியவர்கள் B.A, B.Sc படிக்க விண்ணப்பிக்கலாம்.
M.A, M.Sc, M.B.A படிக்க B.A, B.Sc, B.B.A முடித்து இருக்க வேண்டும், இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்
M.Phil, Phd படிக்க M.A, M.Sc முடித்து இருக்க வேண்டும், இறுதி ஆண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்
தேர்விற்க்கு விண்ணப்பிக்க : https://testservices.nic.in/ExamSys21/Registration/Instruction.aspx என்ற இணையதளத்திற்க்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.800
தேர்வுகள் வருகின்ற செப்டம்பர் மாதம் 15,16, 23, 24 தேதிகளில் நடைபெறும்.
இந்த தேர்வு பற்றிய முழு விபரங்கள் கீழ்காணும் லின்கில் உள்ளது
UG : https://cucet.nta.nic.in/WebInfocms/File/GetFile?FileId=1&LangId=P
PG : https://cucet.nta.nic.in/WebInfocms/File/GetFile?FileId=2&LangId=P
கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி Wisdom - கல்வி, வேலை வாய்ப்பு வழிகாட்டி பக்கத்தை Like செய்யுங்கள்.
விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.
ஆக்கம் : S.சித்தீக் M.Tech
https://www.facebook.com/wisdomkalvi/posts/1451627891877123 For more info,click here