Minorities Educational Scholarship

Share this article on :

சிறுபான்மையினருக்கான கல்வி உதவி தொகை

தனியார் மற்றும் அரசு பள்ளி / கல்லூரிகளில் கல்வி பயிலும் முஸ்லீம், கிறித்துவ, சீக்கிய மற்றும் பிற சிறுபான்மை மாணவர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் குறிபிட்ட அளவில் கல்வி உதவி தொகை வழங்கிவருகின்றது.

இதற்கு தற்போது விண்ணப்பிக்கலாம், அதன் விபரங்களை பார்ப்போம்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மை மாணவர்களுக்கு Pre-matric, Post-matric, மற்றும் MERIT CUM MEANS ஆகிய மூன்று விதமான கல்வி உதவித் திட்டங்களை மத்திய அரசு வழங்கி வருகின்றது.

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இந்த உதவித் தொகை கிடைக்காது. அரசு ஒரு குறிபிட்ட எண்ணிக்கையின் அடிப்படையில் கல்வி உதவி தொகையை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றது.

இது போன்ற உதவிகளில் வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ளவர்களுக்கும், பெற்றோரின் ஆண்டு வருமானம் குறைவாக உள்ளவர்களுக்கும், ஆவணங்கள் அனைத்தும் சரியாக வைத்து இருப்பவர்களுக்கும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

Pre-matric கல்வி உதவித் தொகை :

இந்த உதவி தொகை 1- ஆம் வகுப்பு முதல் 10- ஆம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்த உதவியை பெற பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்க்கு மிகாமல் இருக்க வேண்டும் .

உதவி தொகை விபரம் :

விட்டிலிருந்து பள்ளியில் படிக்கும் 1-ஆம் வகுப்பு முதல் 5 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருடத்திற்க்கு ரூ.1000 வழங்கப்படுகின்றது.

6-ஆம் வகுப்பு முதல் 10 - ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வருடத்திற்க்கு ரூ.5000 வழங்கப்படுகின்றது.

ஹாஸ்டலில் தங்கி படிக்கும் 6-ஆம் வகுப்பு முதல் 10 - ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருடத்திற்க்கு ரூ.10000 வழங்கப்படுகின்றது.

கூடுதல் விபரங்கள் கீழ் காணும் லின்கில் உள்ளது https://scholarships.gov.in/public/schemeGuidelines/MoMA_Pre_Matric_2018-20.pdf

Post-matric கல்வி உதவித் தொகை :

இந்த உதவித் தொகை 11-ஆம், 12-ஆம் வகுப்பு, சான்றிதழ் படிப்பு (ITI), டிப்ளோமா, இளநிலை பட்ட படிப்பு (UG), முதுகலை பட்ட படிப்பு (PG) மற்றும் Phd படிப்பு படிக்கும் மாணவர்களுக்காக வழங்கப்படுகின்றது. இந்த உதவியை பெற பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்க்கு மிகாமல் இருக்க வேண்டும் .

உதவி தொகை விபரம் :

படிப்பிற்க்கு ஏற்ப வருடத்திற்க்கு ரூ.7000 முதல் ரூ.12,000 வரை வழங்கப்படுகின்றது

கூடுதல் விபரங்கள் கீழ் காணும் லின்கில் உள்ளது https://scholarships.gov.in/public/schemeGuidelines/MoMA_Post_Matric_2018-20.pdf

MERIT CUM MEANS கல்வி உதவி தொகை :

இந்த உதவித் தொகை பொறியியல் (Engineering), மருத்துவம் (medicine) மற்றும் சட்டம் (Law) படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்த உதவியை பெற பெற்றோரின் ஆண்டு வருமானம் இரண்டரை லட்சத்திற்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மத்திய அரசின் NIT/IIT உட்பட 85 உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் சிறுபாண்மை மாணவர்களுக்கு முழு கல்வி கட்டணமும் கல்வி உதவியாக வழங்கப்படும், மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் பட்டியல் கீழ் காணும் லின்கில் உள்ளது.

http://www.minorityaffairs.gov.in/sites/default/files/Institution_List.pdf

உதவி தொகை விபரம் :

விட்டிலிருந்து கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு வருடத்திற்க்கு ரூ.25,000 வழங்கப்படுகின்றது.

ஹாஸ்டலில் தங்கி மாணவர்களுக்கு வருடத்திற்க்கு ரூ.30,000 வழங்கப்படுகின்றது.

கூடுதல் விபரங்கள் கீழ் காணும் லின்கில் உள்ளது https://scholarships.gov.in/public/schemeGuidelines/MoMA_MCM_2018-20.pdf

மேலே குறிப்பிடப்பட்ட தொகை அரசால் வழங்கப்படும் அதிகபட்ச தொகையாகும். கல்வி கட்டணத்திற்க்கு ஏற்ப இதை விட குறைவாகவும் வழங்கப்படும்.

இந்த கல்வி உதவி பற்றிய பொதுவான தகவல் :

• மாணவர்கள் 50 % - க்கு மேல் மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும். • ஒரு குடும்பத்தில் 2 மாணவர்களுக்கு மேல் உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது. • உதவித் தொகை நேரடியாக மாணவர்களின் வங்கி கணக்கிற்க்கு அனுப்பி வைக்கப்படும். • இந்த கல்வி உதவித் தொகை பெறுபவர்கள் மத்திய அரசின் மற்ற எந்த கல்வி உதவிக்கும் விண்ணப்பிக்க கூடாது. • ஒரு முறை கல்வி உதவி வழங்கப்பட்டால் “Renewal” முறையில் படிப்பு முடியும் வரை விண்ணபித்து கல்வி உதவித் தொகை பெறலாம் • மாணவரின் வருகை பதிவேடு (attendance) கணக்கில் கொள்ளப்படும், வருகை பதிவேடு குறைவாக உள்ள மாணவர்களுக்கு உதவித் தொகை நிறுத்தப்படும் • தொடர்ந்து 50 % - க்கு மேல் மதிப்பெண் எடுக்காவிட்டால் உதவித் தொகை நிறுத்தப்படும் • குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் • மொத்த கல்வி உதவி தொகையில் 30 % மாணவியர்களுக்கு ஒதுக்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை :

New Registration: புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் இந்த https://scholarships.gov.in/fresh/newstdRegfrmInstruction இணைய தளத்தில் விண்ணப்பிக்கவும்

Renewal : ஏற்கனவே கல்வி உதவி தொகை பெற்று, மீண்டும் விண்ணப்பிக்கும் மாணவர்கள் இந்த https://scholarships.gov.in/renewal/loginPage இணைய தளத்தில் விண்ணப்பிக்கவும்.

மாணவர்கள் விண்ணப்பித்த பிறகு கல்லூரி/பள்ளி நிர்வாகம் மாணவர்களின் விண்ணப்பத்தை அதே இணையதளத்தில் அங்கீகரிக்க வேண்டும் , பிறகு அரசின் நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Pre-matric விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 15 (15-11-2021)

Post-matric, MERIT CUM MEANS விண்ணபிக்க கடைசி தேதி நவம்பர் 30 (30-11-2021)

விண்ணப்பிக்க தேவையான சான்றிதழ்கள் :

• வருமான சான்றிதழ் (Income certificate ), வருமான சான்றிதழை அரசிடம் இருந்து பெற வேண்டும். Self declaration-யை தவிர்க்கவும். • சாதி சான்றிதழ் (Community certificate ) • மாணவரின் புகைபடம் • தொலை பேசி எண் மற்றும் மின் அஞ்சல் முகவரி (E-Mail) • பள்ளி / கல்லூரியின் சான்று படிவம் (Institution Verification Form) • கடந்த ஆண்டு எடுத்த மதிப்பெண் (Self Attested Certificate of Previous Academic year Mark sheet) • கல்வி கட்டண ரிசிப்ட் (Fee Receipt of current course year) • மாணவரின் வங்கி கணக்கின் முதல் பக்கம் (Proof of Bank Account in the name of student) • ஆதார் எண் • இருப்பிட சான்றிதழ் (Residential Certificate) • ஹாஸ்டலில் தங்கி படிப்பவர் எனில் கல்லூரி/பள்ளி நிர்வாகத்திடம் இருந்து அதற்க்கான உறுதி சான்றிதழ் பெற வேண்டும். • Renewal முறையில் மீண்டும் கல்வி உதவி பெற Utilization certificate கல்லூரி/பள்ளி நிர்வாகத்திடம் இருந்து பெற வேண்டும்.

Pre-matric, Post-matric வகை கல்வி உதவிக்கு சான்றிதழ்களை ஸ்கேன் (scan) செய்து பதிவேற்றம் (upload) செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

MERIT CUM MEANS கல்வி உதவிக்கு மட்டும் சான்றிதழ்களை ஸ்கேன் (scan) செய்து இணையதளத்தில் பதிவேற்றம் (upload) செய்ய வேண்டும்.

இந்த கல்வி தொகைக்கு விண்ணப்பிக்க சந்தேகம் இருந்தாலோ, அல்லது கூடுதல் விபரம் தேவைபட்டாலோ கமென்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்.

கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.

விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்

ஆக்கம் : S.சித்தீக் M.Tech