துணை மருத்துவ பட்ட படிப்பு (Paramedical degree course) படிக்க தற்போது விண்ணப்பிக்கலாம்

Share this article on :

துணை மருத்துவ பட்ட படிப்பு (Paramedical degree course) படிக்க தற்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 08-11-2021 (நவம்பர் -8)

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ கல்வி நிறுவனங்களில் துணை மருத்துவ பட்ட படிப்பு (Paramedical degree course) படிக்க நீட் (NEET) மதிப்பெண் தேவை இல்லை, +2-ல் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகின்றது. மாணவர்கள் இதற்கு தற்போது விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க கடைசி தேதி 08-11-2021 (நவம்பர் -8)

கீழ்காணும் 19 துணை மருத்து பட்ட படிப்புகள் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்வி நிறுவனங்களில் பயிற்றுவிக்கப்படுகின்றது.

1 B.P.T (Physiotherapy) 2 B.PHARM 3 B.SC.(NURSING) 4 BASLP 5 B.SC. RADIOGRAPHY AND IMAGING TECHNOLOGY 6 B.SC. RADIO THERAPY TECHNOLOGY 7 B.SC. CARDIO-PULMONARY PERFUSION TECHNOLOGY 8 B.SC MEDICAL LABORATORY TECHNOLOGY (MLT) 9 B.SC OPERATION THEATRE & ANAESTHESIA TECHNOLOGY 10 B.SC CARDIAC TECHNOLOGY 11 B.SC CRITICAL CARE TECHNOLOGY 12 B.SC DIALYSIS TECHNOLOGY 13 B.SC PHYSICIAN ASSISTANT 14 B.SC ACCIDENT & EMERGENCY CARE TECHNOLOGY 15 B.SC RESPIRATORY THERAPY 16 B. OPTOM 17 B.O.T 18 B.Sc.NEURO ELECTROPHYSIOLOGY 19 B.Sc.CLINICAL NUTRITION

அரசு மருத்துவ கல்லூரிகளில் கல்வி கட்டணம் வருடத்திற்க்கு ரூ.3,000 மட்டுமே, அரசு ஒதுக்கீட்டில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி கட்டணம் வருடத்திற்க்கு ரூ.33,000 முதல் ரூ.43,000 வரை இருக்கும்.

கல்வி தகுதி :

12- ஆம் வகுப்பில் கீழ்காணும் பாட பிரிவை தேர்ந்தெடுத்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

a) இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry) மற்றும் உயிரியல் (Biology)

b) இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry) மற்றும் தாவரவியல் (Botany), விலங்கியல் (Zoology)

c) B.Pharm., B.ASLP, B. Optom. படிப்புகளுக்கு மட்டும் இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry), கணிதம் (Mathematics) படித்த மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

குறைந்தது 40 % மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும் வயது வரம்பு : 17 முதல் 30 வயது வரை

விண்ணப்பிக்கும் முறை : https://testpmc21.tnmedicalonline.co.in/MyCourse.aspx என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அல்லது அருகில் உள்ள அரசு கல்லூரிக்கு நேரடியாக சென்றும் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதை நகல் (பிரின்ட் அவுட்) எடுத்து, கீழ்காணும் ஆணவங்களின் நகல்களை (Attested copy) இணைத்து A4 size cloth lined கவரில் கீழ்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்

THE SECRETARY, SELECTION COMMITTEE, 162, PERIYAR E.V.R. HIGH ROAD, KILPAUK, CHENNAI – 600 010.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் :

• 10-ஆம், 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (10th, +2 mark sheet) • 12-ஆம் வகுப்பு ஹால் டிக்கட் (+2 hall ticket) • மாற்று சான்றிதல் (Transfer Certificate) • சாதி சான்றிதழ் (Community Certificate) • குடும்பத்தில் முதல் பட்டதாரி என்றால், கல்வி உதவி பெற First graduate certificate • 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளியில் படித்தற்க்கான சான்று

இந்த சேர்க்கை பற்றிய முழுவிபரம் கீழ்காணும் லின்கில் உள்ளது https://tnmedicalselection.net/news/24102021212303.pdf

துணை மருத்துவ படிப்புகள் பற்றி விரிவாக அறிந்து கொள்ள நமது விஸ்டம் வழிகாட்டி சேனலில் உள்ள இந்த https://www.youtube.com/watch?v=_J1DyXLXBk8 விளக்க வீடியோவை பார்க்கவும்

கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள நமது விஸ்டம் கல்வி வழிகாட்டி www.facebook.com/wisdomkalvi/ பக்கத்தை Like செய்யுங்கள்.

விஸ்டம் கல்வி வழிகாட்டி Youtube சேனலை https://www.youtube.com/c/WisdomKalvi Subscribe செய்துகொள்ளுங்கள்.

ஆக்கம் : S. சித்தீக் M.Tech

For more info, click here