Barathiyar University tied up with Harvard University for Online Studies
அமெரிக்காவில் செயல்படும் ஹார்வர்டு வணிகப் பள்ளியுடன் இணைந்து கோவை பாரதியார் பல்கலைக்கழகம் பல்வேறு ஆன்லைன் படிப்புகளை வழங்குகிறது.
இதன்வாயிலாக, சர்வதேச புகழ்பெற்ற பெற்ற கல்விநிறுவனத்தில் வீட்டில் இருந்தபடியே படிக்கும் வாய்ப்பை பெறலாம்.
படிப்பு: பிசினஸ் அனலிட்டிக்ஸ்
படிப்புகாலம்: 8 வாரங்கள் - சுமார் 40 மணிநேரம்
முக்கியத்துவம்: தொழில் துறையில் நேரடியாக சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் அகையில், அடிப்படை தரவு பகுத்தலை மேற்கொள்வதற்கான பயிற்சி இப்படிப்பின் வாயிலாக வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 10, 2022
படிப்பு: சஸ்டைனபில் பிசினஸ் ஸ்ராட்டெஜி
படிப்பு காலம்: 3 வாரங்கள் - சுமார் 20 மணிநேரம்
முக்கியத்துவம்: தொழில்துறையில் மதிப்புமிக்க தலைவராக உயர தேவையான கடைபிடிக்க வேண்டிய நுணுக்கங்கள் இப்படிப்பில் விளக்கப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 14, 2022
படிப்பு: என்டர்பிரனர்ஷிப் எசென்ஷியல்
படிப்பு காலம்: 4 வாரங்கள்
முக்கியத்துவம்: சரியான தொழில் வாய்ப்புகளை தேர்வு செய்வது முதல், சந்தையை மதிப்பிடுதல், சவால்களை கண்டறிதல், நிதிசார்ந்த முடிவுகளை எடுத்தல் உட்பட் பல்வேறு அம்சங்கள் இதில் கற்றுத்தரப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 7, 2022
படிப்பு: பினான்சியல் அக்கவுண்டிங்
படிப்பு காலம்: 8 வாரங்கள் - சுமார் 60 மணிநேரம்
முக்கியத்துவம்: நிதி சார்ந்த பிரதான முடிவுகளை எடுக்கும் விதம் மட்டுமின்றி, முறையான நிதி திட்டமிடல், கணக்கிடுதல் உட்பட நிதி சார்ந்த பல்வேறு அம்சங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 3, 2022
படிப்பு: எக்னாமிக்ஸ் பார் மேனேஜர்
படிப்பு காலம்: 8 வாரங்கள் - சுமார் 60 மணிநேரம்
முக்கியத்துவம்: தொழில் துறையில் திறம்பட செயல்பட தேவையான பொருளாதார அறிவை பெரும் வகையில் இப்படிப்பு திட்டமிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 7, 2022
குறிப்பு: இப்படிப்புகளை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களுக்கு &'ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூள் ஆன்லைன்’ கல்வி நிறுவனத்தால் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
விபரங்களுக்கு: https://b-u.ac.in/