NEET candidates can apply for MBBS and BDS

Share this article on :

தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டு MBBS/BDS படிக்க நீட் (NEET) தேர்வு எழுதிய மாணவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 7 (7-1-2022)

நீட் (NEET) தேர்வில் குறைந்தது 138 மதிப்பெண் எடுத்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இட ஒதுக்கீட்டு பிரிவினர்கள் (BC, BCM, SC, SCA, ST) 108 மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் வழிமுறை :

https://ugreg.tnmedicalonline.co.in/ என்ற இணையத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு நேரடியாக சென்றும் விண்ணப்பத்தை பெற்று கொள்ளலாம். கடைசி தேதி ஜனவரி 7 (7-1-2022)

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்காணும் முகவரிக்கு ஜனவரி 10-ஆம் தேதிக்குள் (10-1-2022) அனுப்பிவைக்க வேண்டும்

SELECTION COMMITTEE, DIRECTORATE OF MEDICAL EDUCATION, 162, PERIYAR E.V.R. HIGH ROAD, KILPAUK, CHENNAI – 600 010

அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் (government quota) அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்க தனியாக விண்ணப்பிக்க வேண்டும். தனியார் மருத்துவ கல்லூரிகளில் (management quota) நிர்வாக ஒதுக்கீட்டில் இடம் கிடைக்க தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் ? தமிழக அரசின் இட ஒதுக்கீடு யாருக்கெல்லாம் கிடைக்கும் ?

தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த MBBS/BDS கலந்தாய்விற்கு தகுதியானவர்கள். தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்பதை நிருபிக்க பிறப்பிடச் சான்றிதழை (Nativity Certificate) விண்ணப்பிக்கும் போது கட்டாயம் இணைக்க வேண்டும்.

வெளி மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து இருந்தால் அவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது, பொதுப்பிரிவில் (OC) மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் வெளி மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து இருந்தால் அவர்களும் விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீட்டிற்கு அவர்கள் தகுதி பெற்றவர்கள்.

தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் வெளிநாட்டில் படித்து இருந்தாலும் (இந்திய பாஸ்போர்ட் வைத்து இருப்பவர்கள்) இந்த MBBS/BDS கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கலாம். இட ஒதுக்கீட்டிற்கும் அவர்கள் தகுதியானவர்கள். கூடுதலாக Eligibility Certificate பெற வேண்டும். இது DR.M.G.R. மருத்துவ பல்கலை கழகத்தின் இணையதளத்தில் விண்ணப்பித்து பெற்றுகொள்ளலாம்.

வெளிநாட்டில் குடியுரிமை பெற்று வாழும் தமிழகத்தை சேர்ந்த OCI கார்ட் வைத்திருக்கும் மாணவர்களும் இந்த MBBS/BDS கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது, பொதுப்பிரிவில் (OC) மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

வெளி மாநிலத்தில் படித்த வெளி மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் இந்த MBBS/BDS கலந்தாய்விற்கு விண்ணபிக்க முடியாது.

மேலே குறிப்பிட்ட விதிமுறைகள் அனைத்தும் அரசு ஒதுக்கீட்டிற்கான (government quota) கலந்தாய்விற்கு மட்டுமே பொருந்தும். நிர்வாக ஒதுக்கீட்டிற்கான (management quota) கலந்தாய்வில் NRI மாணவர்கள் உட்பட யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம், கட்டுபாடுகள் கிடையாது.

இந்த வருடம் MBBS / BDS கட் ஆஃப் மதிப்பெண் எப்படி இருக்கும் ?

தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் MBBS இடம் கிடைக்க நீட் தேர்வில் குறைந்தது 520 முதல் 550 மதிப்பெண்கள் எடுத்து இருக்க வேண்டும். ஒரு வருடத்திற்கான கல்வி கட்டணம் ரூ.13,610 மட்டுமே. அரசின் கல்வி உதவி எளிதில் கிடைக்கும் என்பதால் கல்வி கட்டணம் இல்லை என்றே சொல்லலாம்.

தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் MBBS இடம் கிடைக்க நீட் தேர்வில் குறைந்தது 500 முதல் 530 மதிப்பெண்கள் எடுத்து இருக்க வேண்டும். ஒரு வருடத்திற்கான கல்வி கட்டணம் 4 லட்சம் ரூபாய் (Rs.4,00,000).

தனியார் பல் (Dental) மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் BDS இடம் கிடைக்க நீட் தேர்வில் குறைந்தது 280 முதல் 320 மதிப்பெண்ணாவது எடுத்து இருக்க வேண்டும். ஒரு வருடத்திற்கான கல்வி கட்டணம் இரண்டரை லட்சம் ரூபாய் (Rs.2,50,000).

தனியார் மருத்துவ கல்லூரிகளில் (management quota) நிர்வாக ஒதுக்கீட்டில் MBBS இடம் கிடைக்க நீட் தேர்வில் 130 மதிப்பெண் எடுத்தாலே போதும். ஒரு வருடத்திற்கான கல்வி கட்டணம் ரூ.12,50,000.

தனியார் மருத்துவ கல்லூரிகளின் NRI ஒதுக்கீட்டில் MBBS இடம் கிடைக்க நீட் தேர்வில் 120 மதிப்பெண் எடுத்தாலே போதும். ஒரு வருடத்திற்கான கல்வி கட்டணம் ரூ.23,50,000.

அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிற்கான (government quota) கலந்தாய்வு பற்றிய முழு விபரமும் கீழ்காணும் அறிவிப்பில் உள்ளது பார்க்கவும் https://tnmedicalselection.net/news/21122021052338.pdf

தனியார் மருத்துவ கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டிற்கான (management quota) கலந்தாய்வு பற்றிய முழு விபரமும் கீழ்காணும் அறிவிப்பில் உள்ளது பார்க்கவும் https://tnmedicalselection.net/news/21122021052356.pdf

MBBS / BDS படிப்பு சம்மந்தமாக கூடுதல் விபரம் தேவை என்றால் https://www.facebook.com/wisdomkalvi/posts/1530478650658713 பதிவின் கமெண்டில் கேளுங்கள் விளக்கம் அளிக்கப்படும்.

ஆக்கம் : S. சித்தீக் M.Tech