நீட் (NEET) தேர்விற்கு செலவில்லாமல் படிக்க (Self preparation) சில வழிகள்!

Share this article on :

மருத்துவம் படிக்க நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது, அதற்கு படிக்க கோச்சிங் சென்டர்கள் பல ஆயிரங்கள் முதல் சில லட்சங்கள் வரை கேட்கின்றன, இந்த பணத்தை சிலரால் மட்டுமே கொடுக்க முடியும். இதனால் பல மாணவர்கள் செலவில்லாமல் (சுயமாக படித்தல்) Self preparation-க்கு வழிகாட்டல் கேட்டிருந்தனர். அதை பார்ப்போம்

👉 நீட் தேர்வு மொத்தம் 4 பகுதிகளை கொண்டது!

➡️இயற்பியல் (Physics) ➡️வேதியியல் (Chemistry) ➡️உயிரியல் – தாவரவியல் (Biology – botany) ➡️உயிரியல் – விலங்கியல் (Biology – Zoology)

🎯 சுயமாக படிக்க (Self preparation) சில வழிகள்!

பல YouTube சேனல்கள் இலவசமாக நீட் (NEET) தேர்விற்கு வகுப்புகள் நடத்துகின்றன, அதை பார்த்து நாம் நீட் (NEET) தேர்விற்கு தயாராகலாம்.

➡️இயற்பியல் (Physics) வகுப்புகள் தமிழில் https://youtube.com/playlist?list=PLeYQTwAGU7aqnfDLENldPWNkmRcCLV6g9

➡️உயிரியல் – தாவரவியல் & விலங்கியல் (Biology – botany & Zoology) வகுப்புகள் தமிழில் https://youtube.com/playlist?list=PLrl4F_rRUyHsVOYqhtqdvNMxcAfC48ANe

➡️வேதியியல் (Chemistry) வகுப்புகள் ஆங்கிலத்தில் 👉🏻chemistry class-11 https://youtube.com/playlist?list=PLMnHwrPjHwJUPiDzVzy4JF51jMXPxdgma 👉🏻chemistry class-12 https://youtube.com/playlist?list=PLMnHwrPjHwJVdFxnhDNf9fJAf7fbEyJZq

இந்த NEET பாடங்கள் பற்றி இவர்கள் இன்னும் பல வகுப்புகள் எடுத்துள்ளனர். அதை அவர்களின் YouTube சேனலில் பார்க்கலாம்.

🎯 YouTube CHANNELS 👉🏻biology (In Tamil) https://youtube.com/@BiologySimplifiedTamil 👉🏻physics (In Tamil) https://youtube.com/@ConceptsofPhysics 👉🏻Chemistry (In English) https://youtube.com/@EnglishPW

🎯 நீட் (NEET) தேர்வின் கேள்வித்தாள் (question paper) எப்படி இருக்கும் ?

நீட் தேர்வு மொத்தம் 4 பகுதிகளை கொண்டது என்பதை முன்னர் பார்த்தோம். ஒவ்வொரு பகுதியில் 35 + 15 => 50 கேள்விகள் கேட்கப்படும். அதில் 35 + 10 => 45 கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். மொத்தம் 180 பதில்கள், ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண். 180*4 => மொத்தம் 720 மதிப்பெண்கள்.

இதில் 580-க்கு மேல் மதிப்பெண் எடுத்தால் MBBS இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. மாணவர்கள் அவர்கள் சார்ந்த பிரிவிற்கு ஏற்றார் போல் இந்த 580 மாறுபடும்.

அனைத்து கேள்விகளுமே "சரியான விடையை தேர்ந்தெடு (choose the best answer)" என்ற வகையில் இருக்கும். தவறான பதிலுக்கு -1 negative mark இருப்பதால் பதில் தெரிந்த கேள்விகளுக்கு மட்டும் பதில் அளிக்கவும், பதில் தெரியவில்லை என்றால் விட்டுவிடவும்.

ஆக்கம் : S. சித்தீக் M.Tech

For more info, click here